- Monday
- February 24th, 2025

முல்லைத்தீவு – மார்க்கம் மற்றும் பிளம்ரன் – வவுனியா ஆகிய இரட்டை நகர ஒப்பந்தங்களின் மூலம் வடக்கு மாகாண மக்கள் அதிகளவான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த இரட்டை நகர ஒப்பந்தங்கள் காத்திரமானவையல்ல என பலர் விமர்சித்து வருகின்றமைக்கு இது காரணமல்லவெனவும், குறித்த ஒப்பந்தங்கள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும்...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டே வடமாகாண சபையின் அரசியலை அரங்கேற்றுவதாக, சிலர் முன்வைத்து வருகின்ற விமர்சனங்களை மறுப்பதாக, வடமாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வடக்கு முதல்வர், ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல. முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர்...

வட மாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்களிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது. இந்த பிரேரணைகளில் அதிகமானவை...

நெடுந்தாரகை கப்பலின்முதல்ப் பயணம் குறிக்கட்டுவான் – நெடுந்தீவு 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………………………… கௌரவ ஆளுநர் அவர்களே, அமைச்சர் கௌரவ பை(க)சர் முஸ்தபா அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Bryce Hutchesson அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் அவர்களே, உலக வங்கியின்...

மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை வெளிகாட்டும் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே வடமாகாணத்தில் மேற்கொண்டிருக்கின்றது. அதனைவிட ஏனைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெள்ளோட்டம்...

வட மாகாண சபை அதிக அதிகாரங்களை கேட்கின்றது ஆனாலும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேருந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத்...

2013ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவரினால் வடக்கு மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் ரூபா வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயினால் தற்போது வடக்கு மாகாணத்துக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அப்போது ஆளுநராக இருந்தவர் சட்டவிரோதமாக ஆளுநர் நிதியத்திற்குத் திருப்பியிருந்தார். மாகாணசபையிடமிருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட 110...

ஒன்ராரியோ முதலமைச்சர் கத்தலின் வினிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு ஒன்ராறியோ முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார அபிவிருத்தி மற்றும் பெண்களின் வலுவூட்டல், நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசனசேவை, நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21பேர் சாட்சியமளித்துள்ளனர். ஊழல், மோசடி தொடர்பாக வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் விசாரணை நடாத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள்...

முல்லைத்தீவு - மல்லாவி நகரில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவ சிலை அவமானப்படுத்தும் அளவிற்கு அதன் வடிவமைப்பு காணப்படுவதாக வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 82ஆவது அமர்வு நேற்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டுவந்தார்....

வடமாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளன. இவ் ஒப்பந்தமானது எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று கைச்சாத்திடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கனடா விஜயம் செய்துள்ளனர். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படாமல் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் காடுகள், உள்ளிட்ட சுற்றுலா மையங்களை அடையாளப்படுத்தி வடமாகாணத்திற்கான சுற்றுலா கைநூல் ஒன்றை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், இலங்கையின் மற்றைய பாகங்களில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர். இவர்களால் அதிகம் பார்க்கப்படும் இடங்களாக...

கடந்த வருடம் மார்ச் மாதம் தனிப்பட்ட பாவனைக்காக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் 10,000 ரூபா பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தவராசாவுக்கு, அவரது...

வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனிப்பட்ட விஐயமாக லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கு செல்வதன் அடிப்படையில் அவரின் பதவியினை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். குறித்த சத்தியப்பிரமாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது....

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை(3) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் அதிகாலை லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.அவர் மீண்டும் 18ஆம் திகதியே முதலமைச்சர் நாடு திரும்புவார்....

தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மாகாணசபைக்குட்பட்ட பனை, தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளுக்கும் உடனடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை மன்றில் முன்மொழிந்து கருத்துத் தெரிவிக்கையில், மாகாண பனை,...

இயலாமையுடன் கூடிய ஆட்களை அடையாளப்படுத்துவதற்கான வடமாகாண சபையின் மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 400 பேர் நன்மையடைந்துள்ளனர். வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களம் வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா வடக்கு...

வடக்கிலிருந்து 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் எனினும் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்வரை வடக்கில் 26ஆயிரத்து841 முஸ்லீம்கள் மீள் குடியேற்றத்திற்கு விண்ணப்பித்ததாகவும், அவற்றில் 24 ஆயிரத்து 40 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் இரண்டாயிரத்து 801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என்றும் வடக்கு முதலமைச்சரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட 4...

“வடமாகாண முதலமைச்சர் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது" என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார் “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும்...

All posts loaded
No more posts