வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பணிப்புரை விடுத்துள்ளார் வடமாகாண நீர் தேவைகள், குடிநீர் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்விலேயே இந்த அறிவிப்பை அவை தலைவர் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை...

வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு ஆரம்பம்

வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த அமர்வை ஏற்கனவே கடந்த மாதம் 22ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனமுற்றிருந்ததால் அமர்வு பிற்போடப்பட்டது. முதலமைச்சர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய...
Ad Widget

வடமாகாண சபை வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை!

வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்....

என்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடவேண்டாம்! வடக்கு மாகாண முதலமைச்சர்!

தன்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பவேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் கடுமையான சுகவீனமடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை தொடர்பாக தனது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள்...

வடமாகாண விவசாய அமைச்சு மீது விசாரணை

வடக்கு மாகாண விவசாய அமைச்சு மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாண பொது நூலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று விசாரணை செய்திருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால், விசாரணைக்குழு ஒன்று...

வடக்கு மாகாண விவசாய அமைச்சரை பதவி விலகுமாறு கோரிக்கை!

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வடக்கு மாகாண விவசாய அமைச்சரை உடனடியாகப் பதவி விலகுமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு...

வில்பத்தில் சேதமில்லை: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்

வில்பத்து சரணாலயத்தில் மீண்டும் குடியேறியமையால், அந்தச் சரணாலயத்துக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று, வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான வீ.ஜயதிலக்க என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஏ.ஐயூப் வழிமொழிந்தார். செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட...

வடமாகாண கல்வி அமைச்சர் நாங்கள் சொல்வதை கேட்பதுமில்லை. எமக்கு பதிலளிப்பதும் இல்லை! அனந்தி

வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை...

வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம்

வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சபையில் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் உள்ளது...

எந்தவொரு நிதியும் திருப்பி அனுப்பப்படவில்லை

வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒருபோதும் திரும்பி அனுப்பி வைக்கப்படவில்லையென வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

வடமாகணசபையின் 85 ஆவது அமர்வு இன்று வடமாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், தியாகராஜா ஆகியோர் மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்வதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகும் நிலையில் அதன்...

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும்...

வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மாரடைப்பு!

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர...

வடமாகாண சபையால் ஜனாதிபதிக்கு கடிதம்!

தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு, உரிய தீர்வு வழங்க வேண்டும் என கோரி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு வடமாகாண சபையால் இன்று, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவில் 524 ஏக்கர் தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கபட வேண்டும். அவற்றில் 243 ஏக்கர் காணி கடந்த ஜனவரி மாதம் 25 ஆம்...

மாகாணசபை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி பலாலி விமானநிலைய விரிவாகலில் கையெழுத்திடப்போவதில்லை!

பலாலி விமானநிலைய ஓடுபாதையை விரிவாக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் தான் கையெழுத்திடப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 84ஆவது மாகாண சபை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த அமர்வின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பலாலி விமானநிலையத்தை விரிவாக்குவதற்காக 1600 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக அபகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று...

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேச வடக்கு முதலமைச்சர் தயார்!

வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது....

மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிக்க திட்டம்

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

 முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க...

வடக்கு முதல்வர் தொடர்பில் இந்திய மத்திய அரசு வருத்தம்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைவதற்கு...

நெடுந்தாரகை குறித்து விசாரணை நடத்தி விரைவில் பதிலளிக்கப்படும்!

நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வட...

வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடாவிற்கு விஜயம் செய்தேன்

கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கு வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே விஜயம் செய்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடமாகணசபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ரன், மார்க்கம்...

வடமாகாண அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் காலம் நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் கால எல்லை மேலும் 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

 வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. மேற்படி விசாரணை குழு தற்சமயம்...
Loading posts...

All posts loaded

No more posts