- Monday
- February 24th, 2025

வடமாகாணத்தில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும்...

ஆண்டுகாலமாக தீர்வின்றி போராடிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். குறித்த சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்திப்பின் போது, குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் மக்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு...

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!
கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,...

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்...

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பால் கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் வடக்கில் எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் அது தொடர்பான நடைமுறைப் பிரச்சணைகளுடன் அதற்கான நிதியீட்டல்கள் தொடர்பினில் ஆராயப்படவுள்ளது. குறித்த...

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி டெல் தலைமையிலான பிரதிநிதிகள் வட மாகாண முதலமைச்சரை சந்தித்த போது...

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து...

எமது நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலையை கருத்திற்கொண்டு, அவுஸ்ரேலியாவிடம் புகலிடம் கோரும் வட. மாகாண மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்ரேலிய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியரவன்ரி-வெல்ஸ் உள்ளிட்ட குழுவினருக்கும், வட. மாகாண முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருக்கும் இடையிலான...

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த...

வடக்கு மாகாணசபையில் கடந்த வியாழக்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் திடீர் என ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவர்கள் அவையைக் கொண்டு நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த கமலேஸ்வரன் இதனையடுத்து வடக்கு மாகாணசபை...

வட மாகாண முதலமைசரால் நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும்...

காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை அறிவதற்காய் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்...

யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் நிதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக் குறையாகவுள்ளதனால் வெளி நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புலம்பெயர் பொறியியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் உலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள்மற்றும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான...

வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை” என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் விசேட அமர்வொன்று, நேற்று(14) இடம்பெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பிலும் வடமாகாண உயரதிகாரிகள் மீதும்,...

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்தள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார்.
எனினும் இந்த விடயத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் பேசியதன் பின்னர்...

கல்வி அமைச்சர் மீது காசு விடையத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் சொல்ல முடியாது. ஆனால் நிர்வாக ரீதியிலே பல பிரச்சினைகள் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். கடந்த 09.03.2017 அன்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முன்வைக்கப்பட்ட கவனஈர்ப்பு ஒன்று தொடர்பில் தனது கருத்தினை முன்வைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வடமாகாண அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களின் முழு விபரத்தையும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வடமாகாண சபையின் அவைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சபையின் அவைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி முதல் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மாகாண சபை உருவாக்கத்தின்பின்னர் வட மாகாண கல்வி அமைச்சில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் அதிக பட்டதாரிகள் வேலையற்றுக் காணப்படுகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மத்திய...

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 4ஆம் திகதி யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி இருந்தமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சபையில் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்...

வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்றயதினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில்...

All posts loaded
No more posts