- Monday
- February 24th, 2025

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடங்களில் பலவாறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையில் இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, இன்று (புதன்கிழமை) முதலமைச்சரால் அவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அவைத்தலைவர்...

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு...

சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான இன ரீதியான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாகாணசபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 94ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை...

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு.. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட...

வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் மாலை ஆறு மணிக்கு பின்னரும் வகுப்புக்கள் நடத்த தடை விதித்து வடமாகாண சபையில் புதிய நியதி சட்டத்தை கல்வி அமைச்சு உருவாக்க உள்ளது. வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே...

வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா...

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 93ம் அமர்வு நேற்று மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த சம்பவத்திற்கு கண்டனத்தை...

நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் பௌத்த விகாரை பிரதேச சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரா அமைக்கப்படுகிறது என ஆராயுமாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவரசா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடை பெற்றிருந்தது. இதன்போது விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம்...

02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளளிக்கும் முகமாக இன்றைய (17-5-2017) தினம் என்னை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தமது வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல அமைச்சர்களும் சட்டத்துறை தலைமையதிபதியும், கிளிநொச்சி, முல்லைத்தீவு...

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு, இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு...

கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி இந்துக் கல்லூரியின்...

சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால்...

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலியை அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஸ்டிக்கப்படவிருக்கின்றதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு...

வட மாகாண சபையின் கோரிக்கையை புறந்தள்ளி மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு, வட மாகாண சபை எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடக்கு மாகாண மக்களுக்கு என 6 ஆயிரம் பொருத்து...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர்,...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து காணப்படுவதால் வடக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் புதிதாக புற்றுநோய் உள்ளது என இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு உடலின் எந்தப் பாகத்தில் கதிரியக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதைக் கண்டறியும் Moulding Machine பழுதடைந்து உள்ளது. இந்தக் கதிரியக்க இயந்திரம் பழுதுபார்க்கும் நிறுவனத்துடனான...

பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக் கோரி, தலைமை அமைச்சர் அலுவலகத்தின் முன்போ, அரச தலைவர் அலுவலகத்தின் முன்போதான் போராட வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை முன்பாக பட்டதாரிகள் முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள...

வடமாகாண சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (09) வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதன்போது...

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும்...

All posts loaded
No more posts