- Monday
- December 23rd, 2024
விசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , விசாரணை அறிக்கையில் எந்தவெரு இடத்திலும் வடக்கு விவசாய அமைச்சர் ஊழல் மோசடி செய்தார் என்றோ இலஞ்சம்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக, கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த நால்வரில் இருவரை, அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,...
வடக்கு முதலமைச்சருக்கு தமது ஆதரவை வழங்குவதாக புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபையின் முதல்வராக சீ.வீ விக்னேஸ்வரன் இருக்க வேண்டும் . அவருக்கு எதிராக தழிழரசு கட்சி...
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறையை வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்து ஒரு மாதகால கட்டாய விடுமுறையையே தான் வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள...
‘என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சித் திட்டம் கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது’ என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை அவரது ஆதரவாளர்கள் சிலர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்தே தம்மை பதவி கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் யார்...
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை...
வடக்கு மாகாண சபையில் பாரிய சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையில், யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதீனம் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அம்சமாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வனுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தற்போது முக்கிய சந்திப்பொன்று நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாடு...
வடக்கு மாகாணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேற்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும்...
வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர்...
வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி நேற்றைய தினம் (புதன்கிழமை) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில்...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக எதிர்க்கட்சி...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக்...
வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு 96 வது அமர்வு இன்று காலை ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார் அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார் அதன்பின் தன்னிலை விளக்கம் வழங்கும்போது எதுவித...
இன்றைய சிறப்பு அமர்வில் விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் மிக நேர்த்தியாக மறுதலித்துள்ளார். விசாரணையின்போக்கினை துல்லியமாக உடைத்துதெறிந்து நீதிபதிகளுக்கு சட்டம் குறித்தும் நீதி குறித்தும் நடுநிலை குறித்தும் மிக காட்டமான பதிலடி கொடுப்பதாக அவரது விளக்க அறிக்கை அமைந்துள்ளது முக்கிய சாரம்சம்சங்கள்...
மாகாண அமைச்சர்களை நீக்குவதற்கும் புதிதாக நியமிப்பதற்குமான முழு அதிகாரமும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு என்றாலும், தற்போதைய நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் பதவி நீக்கம் தொடர்பில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாதென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு,...
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார் மேலதிகமாக தமிழரசுக்கட்சி...
நாளை(14) வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தன்னிலை விளக்கம் வழங்க உள்ளனர். அதன்பின் முறைப்படி தங்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமைச்சர் குருகுலராஜா அவர்கள் இராஜினாமா செய்யப்போவதாக கட்சித்தலைமைக்கு அறிவித்திருக்கின்ற...
வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் மோசடியில் ஈடுபட்டதாக விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, ஜனாதிபதியிடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாத்திரமன்றி வடமத்திய...
வட மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமாச் செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி...
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் , அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை உறுப்பினர்களுக்கு கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கையின் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளது. குற்றச்சாட்டுக்களை சபையிலும் விசாரணைக்குழுவுக்கும் எழுத்து மூலம் சமர்ப்பித்த...
Loading posts...
All posts loaded
No more posts