- Thursday
- January 23rd, 2025
“மீளாய்வு செய்யும் வரையில், அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே, அமைச்சுகளை பகிர்ந்து வழங்கியுள்ளேன்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், குறித்த பணிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு, கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும்,...
வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்களாக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) காலை மாகாண அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். விவசாய அமைச்சை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை காலமும் விவசாய அமைச்சின் பிரிவுகளாக காணப்பட்ட...
முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக் குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீன்பிடி மற்றும்...
அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவர்கள் மீதான விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது அமைச்சர்கள் இருவர் மீதும் விசாரணை நடாத்தப்படுமெனவும்,...
வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை...
வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ள அமைச்சர்களான த.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேகசன் ஆகியோரின் அமைச்சுக்களான, முறையே கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை முதலமைச்சர்...
வடக்கு மாகாணத்தின் இரு புதிய அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் பதவி வெற்றிடமாக உள்ள நிலையில், கல்வி அமைச்சர் ஒருவரை முதல்வர் தெரிவுசெய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் என சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 13ஆது திருத்தச் சட்டத்திலோ மாகாண சபை தேர்தல் சட்டத்திலோ முதலமைச்சருக்கு...
எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தற்போது வடமாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக நேற்றையதினம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்திருந்தார். இந்நிலையில், அமைச்சுக்களை அமைப்பது தொடர்பாக...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை தூண்டிவிட்டால், அவர் மேல் நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, அதைவிட வேறு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் கடவத்தை விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினராலேயே வடக்கு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப்...
வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில்...
வடக்கு மாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கட்டத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வில், நகை அடகு பிடிப்பவர்களுக்கான நியதிச்சட்டம் குறித்த குழு நிலை விவாதம் நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் அண்மைய காலமாக...
வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்தது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (21) மாலை இடம்பெற்றன. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்...
வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மாகாண சபை உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக ஆளுநரிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அஸ்மின் அயூப் ஆகியோர் நேற்று புதன்கிழமை (21) வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் இருந்து மனு ஒன்றினை கையளித்ததன் ஊடாக நம்பிக்கை...
வட மாகாண அவைத்தலைவருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனத் தெரியவந்துள்ளது. அண்மையில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு சோழ மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் போன்ற ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அச்சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனவும், கடந்த 14ஆம் நாள் அமர்வில் சி.வி.கே சிவஞானம்...
வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக தற்காலிகமாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் முதலமைச்சர் நேற்று(புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது....
வடக்கு மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனநாயக மரபுகளைகாப்பாற்றி பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவைத்தலைவருக்கு அரசியல்ரீதியான மரபுகளும், நடைமுறைகளும் நிச்சயம் தெரிந்திருக்கும். வடக்கு மாகாணசபை பிழையான...
அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அவைத்தலைவர் ஆளுனரிடம் கையளித்தமை சட்டத்திற்கு முரணானது என வடமாகாண முதலமைச்சர் கூறிய கருத்து தொடர்பில் அவைத்தலைவரிடம் வினாவிய போதே அவர் அவ்வாறு...
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்...
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார்.தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அந்த கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை...
Loading posts...
All posts loaded
No more posts