- Friday
- February 21st, 2025

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய...

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது. இதன்போது, சிறிதரன் எம்.பி கருத்து தெரிவித்த போது,...

இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். [caption id="attachment_105059" align="aligncenter" width="720"] sdr[/caption] டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) முடிவுகள் வந்ததன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர்...

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாண சபை தொடர்பில் பேசுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாகாண சபைகளுக்கு...

துருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று...

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்...

நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம்...

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனை முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்த முறை தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. அத்துடன், மனுதார்ரான பா.டெனீஸ்வரனுக்கு வழக்குச் செலவை வழங்குமாறு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவிட்டது. வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சுப் பதவியிலிருந்து முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்...

போருக்கு பின்னரும் மன்னார் பிரதேச பாடசாலைகள் புத்தளத்தில் தற்போதும் இயங்கி வருகின்றமைக்கு கல்வி உயர் அதிகாரிகளின் அசமந்தமே காரணம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடுமையாக சாடினார். மன்னார் பிரதேச பாடசாலைகள் தற்போதும் புத்தளத்தில் இயங்குவதால் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விடயம்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது. பா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் க.வி....

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என, வட. மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். தமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில்...

வடக்கு மாகாணசபையின் பின்னடைவிற்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். – சாவக்கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. இதன் பின்னர் அமர்வுகளும் ஆரம்பமானது. இதன் பின்னர்...

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. விக்னேஸ்வரன், மாகாண முன்னாள் அமைச்சர்கள் கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு...

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவைத் தலைவர், பிரதி அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்காக மாதமொன்றிற்கு சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் 34 இலட்சத்து 898 ரூபாய் மாதமொன்றுக்கு செலவிடப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக வடக்கு மாகாண பேரவை செயலகத்திடமிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது. எனினும் முதலமைச்சர் உள்ளடங்களாக...

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை...

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் நேற்று (புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல்...

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை முதலமைச்சர்...

முதலமைச்சரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வாராந்த கேள்வி பதில் பகுதி... மணலாற்றுக் காணி அபகரிப்புச் சம்பந்தமான இரண்டாம் கட்டுரை தாமதமாகின்றது. அதற்குப் பதிலாகப் பின்வரும் கேள்வியும் பதிலும் தரப்பட்டுள்ளன. இதுவே எனது முதலமைச்சர் காலத்தில் வழங்கப்படும் கடைசி பதிலாகும். தொடர்ந்து நான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் என்று வாசகர்களும் பத்திரிகைகளும் கேட்டால் அவ்வாறு எழுத சித்தமாயுள்ளேன்....

வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் இறுதி அமர்வு நடைபெறுகிறது. அந்தவகையில், வடக்கு மாகாண சபைக்கென ஒரு கீதம் இல்லாத...

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த தமிழரசுக் கட்சியிலிருந்து இடைவிலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்....

All posts loaded
No more posts