- Thursday
- January 23rd, 2025
வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து தாம் இடம்பெயர்ந்த போது தங்களுடைய வீடுகள் நிலம் எவ்வாறு காணப்பட்டதோ அதே போன்று மீண்டும் வழங்கப்படவேண்டும் என வலிகாமம் வடக்கு தையிட்டி- வள்ளுவர் புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது காணிகளை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் மீண்டும் மக்களிடம் எவ்வாறான நிலையில் கையளிக்கின்றார்கள் என்பதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காணி உரிமையாளர்களுடன் நேரடியாக...
பாவனையாளர்கள் நலன் பேணாத, புத்தூர் பகுதியிலுள்ள விவசாய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து, குறித்த நிலையம்,சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, காலாவதியான விவசாய...
புத்தூர், ஏரந்தணை பகுதியில், வயல்காணிகளில் மண் நிரவி கட்டடம் அமைக்கும் தனியார் ஒருவரின் வேலைத்திட்டத்துக்கு, புத்தூர் பிரதேச சபையின் செயலாளர் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள், நேற்று புதன்கிழமை (19) காலை பிரதேச சபையின் அலுவலகத்தினை திறக்கவிடாது முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்தூர் சந்தியில் இருந்து பேரணியாக நடந்து வந்த அப்பகுதி மக்கள்,...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை சேர்ந்த பொது அமைப்புக்கள் இணைந்து இலங்கை சுகாதார அமைச்சரிற்கு கையளித்துள்ள புகாரின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர்,வடமாகாண முதலமைச்சர் ஈறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 77 பொது அமைப்புக்களது பிரதிநிதிகளது ஒப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள...
அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொலைபேசி இணைப்புக்கள் பழுதடைந்துள்ளதால், வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளும் பொதுமக்களும் உள்ளகத்தில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த வைத்தியசாலையில் இரு வெளியக தொலைபேசி இணைப்புக்கள் உண்டு. இவற்றில் ஒரு இணைப்பு பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்கு ஒரேயொரு வெளியக இணைப்பு மாத்திரமே...
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றித் தெரியவருவதாவது, வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும் அவர் தற்போது அங்கிருந்து 10ஆம் திகதி மாற்றலாகி ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்....
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், நேற்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு...
யாழ். கந்தரோடை பிள்ளையார் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் இம் முகாமில் வசிக்கும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக கடந்த 1990ம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழ சுற்றுப்புறச் சூழல்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மது அருந்தி விட்டு அட்டகாசம் புரியும் இளைஞர்கள் தகாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக வீதிகளில் வருபவர்களை மறித்து அட்டகாசம் புரிகிறார்கள். இது தொடச்சியாக இடம்பெறுவதாகவும்...
கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து...
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்....
கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச்...
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தந்தை,தாய்,பிள்ளைகளென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதாக...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை...
யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை காவல்துறையினர் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது , குறித்த ஆலயமானது...
யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர்களால், அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் அவர்களால் அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தை அண்டியுள்ள மணியந் தோட்டம், உதயபுரம், பூம்புகார்,...
கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணியை இந்தியாவின் திருப்பதி தேவாலயத்திற்கு வழங்கவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். கதிர்காமம் - நாகதீபம் பகுதிக்கு அருகிலுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு ருகுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக நிலமேவால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கதிர்காம நகரிலுள்ள ஆலய வளாகத்திற்கு நேற்று பிற்பகல் வந்த மக்கள் போராட்டத்தினை...
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன...
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு...
Loading posts...
All posts loaded
No more posts