- Wednesday
- January 22nd, 2025
நெடுந்தீவு வைத்தியசாலையினுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருவதோடு, அங்கு நிரந்தர வைத்தியர்கள், மற்றும் தாதியர்களை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குடாநாட்டில் தீவுகளில் ஒன்றாகக் காணப்படும் நெடுந்தீவு வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர் இன்றிக்காணப்படுவதால் இந்தப்பிரதேசத்தில்உள்ள சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ தேவைகளைப் பெறுவதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேற்படி வைத்தியசாலை...
கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை சுத்தம் செய்வதற்கு, கரைச்சி பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்தி வரையான ஏ9 வீதியில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலையில் குப்பைக்கூலங்கள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. குப்பைக்கூலங்கள் காணப்படும் பகுதிகளுக்கு அண்மித்தவாறு குடியிருப்புக்கள் காணப்படுகின்ற...
யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியே நேற்றய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தாம் கடன்களை பெற்று...
கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை இறங்குதுறைகள் புனரமைக்கப்படாததன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தமது படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் தொடர்ச்சியாக கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் இந்த பிரச்சினை தொடர்வதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் மேற்கொள்வதில் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில்...
கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும்...
வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வர்த்தகர்கள் கொடுத்த முறைப்பாடுகளையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் அங்கு வருகை தந்து நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சருடன் மாநகர சபை அதிகாரிகளும் வருகை தந்தனர். 2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லையெனவும்...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பேருந்து சேவைகள் நடைபெறாததன் காரணமாக மக்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக...
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன. முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமல் வைத்துள்ள போதும் பாடசாலையைச்...
கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது குறித்த பகுதி நீரின்றி காணப்படும் நிலையில் பெருமளவில் மோட்டார் செல்கள்...
யாழ்.நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும் உரிய பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நீடிக்கும் வறட்சி காரணமாக, குடிப்பதற்கு நீர் இன்றி இதுவரை சுமார் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எவ்வித...
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குபட்ட இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதும், குறித்த பகுதிகளுக்கு அருகே மிதிவெடிகள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமக்கு நிரந்தர...
யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு...
யாழ். கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் உள்ள கால்நடைகளின் இறப்புக்கள் திடீரென அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள குடிமனைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அண்மைக்காலமாக தோல் நோய்கள் தொடர்ச்சியாக...
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில்...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து காணப்படுவதால் வடக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் புதிதாக புற்றுநோய் உள்ளது என இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு உடலின் எந்தப் பாகத்தில் கதிரியக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதைக் கண்டறியும் Moulding Machine பழுதடைந்து உள்ளது. இந்தக் கதிரியக்க இயந்திரம் பழுதுபார்க்கும் நிறுவனத்துடனான...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வது சிரமமாக காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செல்கின்ற பொதுமக்கள்...
கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும்...
உரும்பிராய் பொதுச் சந்தையில் சுகாதாரமற்ற நிலை காணப்பட்டு வருவதனால் பொருட்களை நுகர்வதற்கு மக்கள் தயக்கம் காட்டிவருவதாக சந்தைக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்தையில் இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதன் கழிவுகள் உரிய முறையில்அகற்றப்படாமையினால் சந்தையில் ஒரு பகுதியில் ஏராளமான புழுக்கள் நிறைந்து பார்ப்பதற்கு அருவருக்கத்த வகையில் துர்நாற்றம் வீசிக் காணப்படுகின்றது. மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts