- Wednesday
- January 22nd, 2025
யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் இந்நிகழ்வின் போது எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அடிபணியும் வகையில்...
கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக பயனாளிகள் பூநகரி சமுர்த்தி வங்கிக்கு வருகைத் தந்துள்ளனர். அதன்போது, அவர்களை சில மணிநேரம்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கவனவீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. “2016ஆம் ஆண்டு...
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் செயற்பாடானது, தமது பூர்வீக பகுதியில் அடையாளம்...
யாழ்ப்பாணம் காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியெங்கும் பெரும் பாரிய புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறான...
கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் வசித்த மக்களுக்கு 25 ஏக்கர் தென்னையும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், தென்னைகள் உரிய பராமரிப்பின்றி...
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்ற வைத்தியரின்மையினால் நோயாளர் பெரிதும் சிரமம் அடைந்துவருகிறார்கள். மேற்படி வைத்தியசாலையை நம்பி 4ஆயிரத்து 600 பேர் உள்ள நிலையில் சீரான வைத்தியரின்மையில் வைத்தியசாலை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு வருகை தரும் நோயாளர்கள் வைத்தியரின்மையால் திரும்பிச் செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுகின்றது. நெடுந்தீவு மக்கள் இம்மோசமான...
மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் மாங்குளம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அதற்கு...
தமது சாத்வீகப் போராட்டம் 64 நாட்களினை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில், அவர் தமது கோரிக்கையினை கேட்டறியக் கூட முன்வரவில்லை என புத்தூர் கலைமதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். புத்தூர் கலைமதி பகுதியில் அமைந்துள்ள இந்துமயாணத்தினை அகற்றுமாறு கோரி பிரதேச...
சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி நகரின் மத்தியில்...
தொண்டைமானாறு அக்கரை பகுதியில், மது பாவனைக்குத் தடை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும் இரவு நேரங்களில் மதுவிருந்து தாராளமாக இடம்பெறுவதாக அப்பகுதி மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இரவு நேரங்களில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளஞர்கள் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால், அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. அக்கரை...
அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள நெசவுசாலை கட்டிடத்தினை விடுவிக்குமாறு கோரி அப் பகுதிமக்கள், மதஸ்தலம் ஒன்றிற்கு எதிராக நேற்று(10) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த நெசவு சாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த கட்டிடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டது பிரார்த்தணை வழிபாடுகள் முண்ணெடுகப்பட்டு வந்துள்ளது. குறித்த் மத ஸ்தலத்தினால்...
ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது. ஒலிபெருக்கியின் சத்தத்தினை...
முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன....
எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில்...
முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20...
ராணுவ கட்டுப்பாட்டில் காணப்படும் யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் போக்குவரத்து செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளில் ராணுவத்தின் பாதுகாப்புடனேயே மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மயிலிட்டி துறைமுகம்,...
கிளிநொச்சி பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள்,...
கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தினைப் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது அன்றாடக் கடமைகளை விடுத்து மேற்படி சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் வறட்சிக்கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்...
நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய...
Loading posts...
All posts loaded
No more posts