- Sunday
- December 22nd, 2024
சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதி ஒன்று காணமல் போய் உள்ளது. ஜிம்மா...
யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும்...
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...
முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் நேற்று (22) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்., கடந்த 15.05.2019 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77 ஆம் இலக்க கிராம சேவையாளர்...
கொடிகாமம் பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக W.S.D (work shop development) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களுடைய வீ டுகளுக்குள சென்று சேகாிப்பு திட்டம் என்ப பெயாில் மோசடி வேலையை ஆரம்பித்திருந்தது. இதற்காக அந்த பகுதியை சோ்ந்த சில வறிய குடும்பங்களை சோ்ந்த பெண்களை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என...
எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் மக்கள் கேட்டுள்ளனர். யாழில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்ப நிலை காரணமாக வரட்சி காரணமாக தீவக பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்றது. நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளன. காரைநகர் பகுதிகளில் குடிநீரை பெறுவதற்கு மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி...
பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை...
கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபை முதல்வரின் ஒத்துளைப்போடு தனியார் சிலரால் மூடப்பட்ட வீதியை மீண்டும் திறக்கக்கோரி போராடிவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சந்தித்து கலந்துரையாடியபோது அதனை அறிந்து அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்ட குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த யாழ் மாநகர சபை உறுப்பினரும் துணை முதல்வருமான...
அண்மையில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குப்பைகள் வீசுவதாக மன்னார் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மன்னார் – யாழ்ப்பாண பிரதான வீதி, நாவற்குளம், திருக்கேதீஸ்வரம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள் சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும் இராணுவ முகாம் மற்றும் இராணுவப் பகுதிகளில் உள்ள குப்பைகளை...
தாகம் தீர்க்க கடையொன்றில் உள்ளூர் மென்பானம் வாங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (22)மதியம் உணவருந்திய பின் அந்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார். அத்துடன் அம்மென்பானத்தை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார். இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில்...
வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இல்லாத மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்கிக் கொண்டு சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்திய சம்பவங்கள் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காயத்திற்கு இடும் திரவ மருந்துகள், கட்டுப் போடும் துணி, பண்டேஜ் என்பனவற்றிற்கு யாழ் மாவட்டத்தில்...
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப் பெயரை மாற்றி சிங்களக் குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள...
யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) தமது காணிகளுக்குச் செல்ல வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை நேற்றையதினம் மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால...
பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும்...
வலி.வடக்கு, தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாமென அப்பகுதி மக்கள் அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலி.வடக்கு தையிட்ட ஆவளைப் பகுதியில் மயானம் அமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின்...
வழங்கப்பட்ட உறுதி மொழிக்கேற்ப அகற்றப்பட்ட தனது தொழிலிடத்தை மீண்டும் அமைத்து தாருங்கள் என கேட்ட மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடு என்று வட்டுக்கோட்டையின் வடக்கு அராலி பகுதி ஜே/164 பெண் கிராமசேவகர் ஒருவர் அடாவடித்தனமாக நடத்திய சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் நீர் வழங்கலை மேற்கொள்வதற்காக...
இராணுவம் எமது காணிகள் மூலம் வருமானத்தினை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நாங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் ஒன்றரை வருடங்களை கடந்துள்ள...
நல்லூர் உற்சவ காலத்தின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் பெறுகின்றார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள். இது தொடர்பில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள் என வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். வட.மாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாராட்சி...
தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது...
Loading posts...
All posts loaded
No more posts