- Saturday
- November 23rd, 2024
நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். அவர் நுவரெலியா மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டள்ளார். இதேவேளை தான் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி...
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியுடன் நிறைவு பெறவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். 70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சில கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த கட்சிகள் தமது கணக்கறிக்கையை சமர்ப்பிக்காததன் காரணமாகவே...
இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமர் முதலில் கதிர்காம புனிதத் தலத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது புனிதத் தலத்தின் அபிவிருத்திக்கான சகல பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என பிரதமர் கூறியுள்ளார்....
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகியோர் மட்டுமே 5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். எனவே ஏனைய 33 வேட்பாளர்களும் அந்த சலுகையினை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக தேசிய மக்கள்...
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் முகமாக தேர்தலை நாளை நடத்துவதற்காக இன்று (15) நாடளாவிய ரீதியில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கு இணைவாக இன்று காலை முதல் மதியம் வரை நாடளாவிய ரீதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும். எவரும் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும்...
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி கம்பாஹா – பத்தலகேதர் வித்யலோகா மகா வித்யாலயம் களுத்துறை வடக்கு – முசாயஸ் கல்லூரி கண்டி – மொடல் பாடசாலை மாத்தறை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை)...
நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குக்களை போடுங்கள் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின் கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்த வேண்டும்....
2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை... நம் நாட்டின் தலைவிதியையும் எம் நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தலை நம்நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில் வட – கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் பேசவும் செயற்படவும் வேண்டிய முக்கிய கடமை...
ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரவிராஜ் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஷ...
ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள்...
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி...
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம்...
சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது....
வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்...
ஜனாதிபதி தேர்தலில் குறைந்தபட்சம் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு களமிறங்கியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய...
அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி அந்த விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts