- Wednesday
- January 22nd, 2025
பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை...
2020 பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ள நிலையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு...
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக...
பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்காக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தல்களுக்கு அமைய ஏற்கனவே தபால் மா அதிபருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணக்கங்களை இம் மாதம் 27 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள்...
இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து பிற்போடப்பட்டு இருந்தது. எனினும் பொதுத்தேர்தலை திகதி குறிக்காமல் பிற்போட முடியாது என எழுந்த...
எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேரதல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது என...
பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா தொடர்பில் மார்ச் 25ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, முதன்மை வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ....
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் அரசுக் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன்,...
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 22 மாவட்ட செயலகங்களில் இன்று ஆரம்பமாகுகின்றது. இதற்கமைவாக எதிர்வரும் 12ஆம் திகதி வரை வார நாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சியொன்றில் செயலாளரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் அல்லது குழுவின்...
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனால் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்கள் விரைவாக விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி சம்பந்தப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் அலுவரிடம் ஒப்படைக்க வேண்டும்...
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில்...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆகக்கூடிய உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாக இருப்பதுடன் ஆகக்குறைந்த உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளனர்....
நடைபெறவுள்ள பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், எவ்வாறான காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழு ஒன்று செலுத்தியுள்ளது. மயில்வாகனம் விமலதாஸ் என்பவரே சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு பணம் செலுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் சார்பிலையே இந்தச் சுயேட்சை குழு போட்டியிட உள்ளதாக அறிய முடிகிறது.
வரும் ஏப்ரல் 25 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களைப் போன்று இம்முறையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல்...
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்...
Loading posts...
All posts loaded
No more posts