- Sunday
- April 6th, 2025

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

தமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். (more…)

தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளை இராணுவம் மிரட்டும் நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே தேர்தல்ககள் திணைக்களமும் தேர்தல்கள் ஆணையாளரும் உள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று (நேற்று) கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

மாகாணசபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால், நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டிருக்காது (more…)

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. (more…)

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. (more…)

இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்று கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நிகழ்வை முற்றுகையிட்டுள்ளனர். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம் என்று யாழ். இந்திய கவுன்சிலர் ஜெனரல் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி சர்வதேச சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை நாம் எடுத்துக் கூற வேண்டும். இதுதான் எமது அடுத்த கட்ட நகர்வின் அடித்தளமாக இருக்கும். (more…)

வடமாகாண சபை தேர்தலில் அரசுக்கு பலத்தினை தந்தால், வலி. வடக்கு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்' என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். (more…)

எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்' என வடமாகாண சபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். (more…)

தீவகத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவின் அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவில் பிரசாரம் செய்தவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts