- Wednesday
- April 2nd, 2025

வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம்...

நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா...

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இம்முறை...

கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.சி.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இம்முறை...

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும்...

தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை...

வாக்களிப்பு, நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்த சுகாதார நடைமுறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. கட்டாயமாக முகக் கவசம் அணிதல் 2. கை கழுவும் ஏற்பாடு 3. ஒரு மீற்றர் இடைவெளி 4. ஆளடையாள ஆவணங்களை...

நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் அரச கட்சி வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி உத்தியோகத்தர்களை வற்புறுத்திய பிரதேச செயலாளர் குறித்து முறையிட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகிறது. யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் ஒருவரே இந்த தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் அரச கட்சி என்றுமில்லாத வகையில் தேர்தல்...

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, “70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் எமது உரிமைப் போராட்டங்களிலே நாம் சுமந்த வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் உயிர்கொடுத்து காத்துவரும் எமது அடிப்படை அபிலாசைகள்...

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் தபால் மூல வாக்களிப்பு 25ம்...

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” செயல்திட்ட வரைவாக வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில், ஶ்ரீலங்கா...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 தேர்தல் அறிக்கை வரலாற்றுப் பின்னணி அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான...

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில்...

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட...

ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர்...

பாடசாலை மதிலில் தனது இலக்கத்தையும் கட்சி சின்னத்தையும் கீறியதற்கு மனவருத்தம் தெரிவித்து மதிலுக்கு, புதிதாக சுவர் பூச்சு பூசி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன். தாவடி பகுதியில் உள்ள பாடசாலை மதிலில் வி. மணிவண்ணனின் பெயர் பெரிதளவில் வெள்ளை வர்ணத்தில் எழுதி, அருகில் கட்சி சின்னமும்,...

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார். இம்முறை...

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக...

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். சாவகச்சேரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால்...

All posts loaded
No more posts