ஜனாதிபதி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 19 வேட்பு மனுக்களும் ஏற்பு!

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும், 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டதின் 15ஆம் இலக்க இலக்க தேர்தல் சட்டப்பிரமாணங்களின் படி தேர்தல் சட்டவிதிகளுக்கிணங்க கையளிக்கப்பட்டமையால், அனைத்து வேட்பு மனுக்களும் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார். இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 17...

வேட்பு மனுத்தாக்கல் நேரலை…

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தற்போது நடைபெறுகின்றது.
Ad Widget

12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவளை கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம்...

தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கின்ற அரச உத்தியோகஸ்தர்களின் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திகதி எக்காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும், மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான (more…)

‘அப்பே ஜாதிக்க பெரமுன’: புறா சின்னம்: மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன 'அப்பே ஜாதிக்க பெரமுன' என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன...

மஹிந்தவின் பிரசார சுவரொட்டியில் பாப்பரசரின் படம்! அகற்றக் கோருகிறது பவ்ரல்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசார சுவரொட்டி ஒன்றில் பரிசுத்த பாப்பரசரின் படம் பயன்படுத்தப்பட்டமைக்கு , தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அந்த சுவரொட்டியை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். (more…)

அலைபேசியே சின்னம்?

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

மைத்திரி, வாக்களிக்கமாட்டார்

நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் (more…)

ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நண்பகல் 1.30 மணியளவில் சனாதிபதி தேர்தலை நடாத்த ஆணையாளரை கோருவதற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தார்

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.    குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட...

ஜனாதிபதிக்கு வடமாகாணத்திலிருந்து கூடுதலான வாக்குகள் கிடைக்கும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நம்பிக்கை தெரிவித்தார். (more…)

பிரகடனத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

மஹிந்தவே ஜனாதிபதி வேட்பாளர்! சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது

நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மஹிந்தவே நிற்பார் என அக்கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது என அறவிக்கப்பட்டது. (more…)

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு நாளை விடுக்கப்படும்?

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு , நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக விடுக்கப்படும்?அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அன்றிரவே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சந்திரிகா – ரணில் – சம்பந்தன் கூட்டாக மந்திராலோசனை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து மந்திராலோசனை நடத்தினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

ஜனாதிபதித் தேர்தலை வெள்ளியில் நடத்த முஸ்லிம் எதிர்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஏதேனும் வெள்ளிக்கிழமையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் மிக கடுமையாக எதிர்க்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. (more…)

பொது எதிரணிக் கூட்டணியில் ததேகூ இன்னும் பங்குபெறவில்லை- சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு பேட்டி

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், 'தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை' என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார். குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன்...
Loading posts...

All posts loaded

No more posts