- Saturday
- January 25th, 2025
எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும். மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க...
சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனூடாக வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதுடன், படையினர் சர்வதேச நீதிமன்றில்...
சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி இன்று 23ஆம் திகதியும், நாளை 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பின்போது தமது மனச் சாட்சியின்படி வாக்களிக்குமாறு அரச ஊழியர்களிடம் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின...
"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுகின்றனர் என்றும், அவர்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்றும், யுத்தத்தை வெற்றி கொண்ட சிப்பாய்கள் கீழ் மட்ட வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய...
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் தபால் மூல வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கருத்தை கூறியிருக்கிறார்கள். தபால் மூலமான வாக்களிப்பு முடிந்த பின்னர் கருத்து தெரிவித்து என்ன பயன். எனவே கூட்டமைப்பின் முடிவுக்கு காத்திருக்கவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, திங்கட்கிழமை (22) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (22)...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில், முஸ்லிம்...
ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத...
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும் பிரசாரத்தை நடத்திவிட்டு கிழக்கு மாகாணம் சென்றிருந்தார்...
வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி...
பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்...
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....
தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைக்காக சிறைக் கைதிகளை பயன்படுத்தப்படுவதாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்து சிறை கைதிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபே விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல்...
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளதாகத்...
வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா அவர்கள் இன்று (07.12.2014) கொழும்பில் நடாத்திய ஊடாக மகாநாட்டில் முக்கியமான பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களுமே கடந்த...
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழர்களின் பிரச்சனை குறித்து சாதகமான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதனால் இருவேட்பாளர்களிலும் நாம் திருப்தியடைந்திருக்கவில்லை என தமிழ்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்துகூறியுள்ளார். அரசுக்கட்சியோ சிறுபான்மையினரின் வாக்குகளில் தாம் தங்கியிருக்கவில்லை என கூறியுள்ளது. அதேவேளை மைத்திரி பால சிறிசேன அவர்களின் அண்மைக்கால கூற்றுக்கள் எமக்கு எதிரான...
Loading posts...
All posts loaded
No more posts