நடிகர் சல்மான், ஜனாதிபதி மஹிந்தவுடன் பிரசார கூட்டத்தில் இணைந்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை...

கூட்டமைப்பின் முடிவு நாளை!ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்து பேச்சு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த முடிவு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித்...
Ad Widget

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்?

இயற்கை அனர்த்தங்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்...

கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம்!அரசு பெரும்பான்மையினை இழந்தது!

முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து விலகி எதிரணி சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை யில் இருந்த அவர்களது 7 இடங்களும் எதிரணிக்கு ஆதரவாகி உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை கொண்ட கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம் வந்திருக்கிறது. அரசு சார்பில் 12 உறுப்பினர்களும் கூட்டமைப்பு சார்பில் 11 இடங்களும் ஐதேக சார்பில் 4 இடங்களும் உள்ளன. ரிசாத்...

முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகியது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை...

தேர்தல் பிரசாரத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன. சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஞாயிறன்று?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  சிகிச்சையின் பின்னர் இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள நிலையில்,சனாதிபதித்தேர்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது. இரண்டு வேட்பாளர்களும் வடக்கில் இருந்து இராணுவத்தினை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பிலான அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றது....

இராணுவத்தை வெளியேற்ற நாம் போராடுகின்றோம் – பாணி விஜேசிறிவர்தன

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற நாம் இதுவரை காலமும் போராடினோம். போராடி வருகின்றோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் செய்யவில்லையென சோசலிய சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜிசிறிவர்தன தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை...

நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன! மைத்திரி வெல்வது உறுதி!!

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார். - இவ்வாறு முன்னாள்...

மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இராணுவம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று...

தமிழர்களின் வாக்குகளுக்காக மஹிந்த இரட்டைவேடம் போடுகிறார்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ இரட்டை வேடம் போடுகிறார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால் மாறாக மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர்...

யாழில் 90% தபால்மூல வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பில் யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தபால் மூலமான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (23) முதல் 250 வாக்குச் சாவடிகளில் 200 தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது....

ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி மைத்திரிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் புதன்கிழமை (24) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில்...

ஜனாதிபதி மகிந்தவுக்கு டில்ஷான் ஆதரவு!, சங்கக்கார ??

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான...

எலி, பூனை, கரப்பத்தான் மட்டுமே மஹிந்தவுடன் இறுதியாக இருக்கும்!- மைத்திரி சவால்

எதிர்வரும் 5ம் திகதி எலி - பூனை - கரப்பத்தான் மட்டுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இறுதியாக இருக்கும் என எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கட்சித்தாவலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் வருகின்ற 5 ம் திகதி தேர்தல் பிரசார இறுதி நாளில்...

நாங்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து வாக்களிப்போம் : யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எமது உறவுகள் கொத்துக் கொத்தாக வயது பால் வேறுபாடின்றி உடல் சிதறி இறந்ததையா? இறந்த உடல்கள் அதே இடத்தில் அழுகியதையா? கைது செய்யப்பட்டுக் காணாமற் போனவர்களையா? போர்...

கூட்டமைப்பின் நிலைப்பாடு 27 ஆம் திகதி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரக் கடைசியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் கூட்டமைப்பின் தலைவர்...

வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் பெயரில் தேர்தல் மோசடி – கபே

குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், இந்த...

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தல், வாக்களிப்பு நிலையம் மூடப்பட்டது!!

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு நிலையமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கென வந்த ஊழியர்களை, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர் மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இதற்கு காரணம் என...

“உலகத்தை வெல்லும் வழி!” வெளியானது மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம்(நேரடி ஒளியலை வரிசை)

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞாபனம் இன்று 23.12.2014 முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வெளியிடப்பட்டது. “மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான...
Loading posts...

All posts loaded

No more posts