- Monday
- January 27th, 2025
தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரக்கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது எனக்கூறி அழைத்தமை தொடர்பில்...
"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8 ஆம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு தனியார் பஸ்கள் மற்றும் போக்குவரத்துச் சபை பேருந்துகள் என 191 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் 63 பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் தெரிவித்தார். பருத்தித்துறை சாலையிலிருந்து 10 பேருந்துகளும், காரைநகர் சாலையிலிருந்து 10...
தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார். நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்'...
'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளன. அந்தவகையில் யாழ்....
கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...
எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...
வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்குசீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு...
யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார். அந்த விளம்பரத்தினை தந்தவர்களது விபரத்தினை தருமாறு அவர் கடிதமூலம் தொலைக்காட்சிக்கு கேட்டிருக்கின்றார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில்...
எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்”, “அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்” என்று குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
'நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி. நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்துகொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம்' என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்....
வேலணைப் பகுதியில் பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைக் கடுமையாக எச்சரித்த கும்பல் ஒன்று, அவர்கள் பயணித்த வாகனத்தையும் கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெத்தினம் தலைமையிலான கூட்டமைப்பு...
தமிழ் மக்களை இன ஒடுக்கலுக்கு உள்ளாக்கிய, அவலங்களைத்தரும் மகிந்தவின் ஆட்சியை மாற்றவுண்டியது தமிழர்களின் தலையாய கடமை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள்...
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை 5-ம் திகதி முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும்...
"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட...
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் சனிக்கிழமை (03) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு: வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி குறித்த அரச ஊழியர்கள் அருகில் உள்ள மாவட்ட தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts