- Wednesday
- January 22nd, 2025
புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான ஆவணத்தினைப் பெற்றுக்கொண்டதா இல்லையா...
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று விசேட அறிக்கையை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்தார்....
சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நிலைமை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் இரண்டு வருடங்கள் கடந்த...
2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது....
மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன் போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், அத்துடன் நாட்டில் தற்போதைய...
வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020 ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, சம்பந்தப்பட்டவர்கள் தற்பொழுது வடக்கு மாகாணங்களில் பதிவு...
புதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு விண்ணப்பித்த நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் புதிய அரசியல் கட்சியின் பதிவிற்காக 160 கட்சிகள் விண்ணப்பித்திருந்தபோது தேர்தல் அறிவித்தல் வெளியானது. இதனால் புதிய கட்சிகளின் அங்கீகாரம் தடைப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுற்றதனால் புதிய கட்சிகளின் பதிவினை...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனைவிட, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் எங்கள் மக்கள்...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது...
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான யாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்...
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபகசக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல்...
கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் அட்டக்காசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டின்...
வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம்...
நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இம்முறை...
கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.சி.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இம்முறை...
2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும்...
தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை...
வாக்களிப்பு, நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்த சுகாதார நடைமுறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. கட்டாயமாக முகக் கவசம் அணிதல் 2. கை கழுவும் ஏற்பாடு 3. ஒரு மீற்றர் இடைவெளி 4. ஆளடையாள ஆவணங்களை...
Loading posts...
All posts loaded
No more posts