- Monday
- November 25th, 2024
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த...
யாழ்.மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டால், குறைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக...
“நான் அரசியலுக்கு விரும்பி வந்த ஒரு பெண்ணல்ல என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்து விட்டு இப்போது நட்டாற்றில் கொண்டு வந்து விட்டதுபோல் இப்போது ஒரு உணர்வு க்குள் இருக்கின்றேன்” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அனுப்பி வைத்துள்ளனர். அக் கடிதத்தில்...
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக் கட்டமைப்பு ரீதியாக தாம் ஆற்றவிரும்புகின்ற - தாம் ஆற்றக்கூடிய - பங்கு பணி குறித்து ஒன்றுகூடி ஆராயவிருக்கின்றனர். சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் ஒருங்கிணைப்பில் வடமாகாணத்தில் உள்ள முன்னாள் சிரேஷ்ட போராளிகள் பலர் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றனர்....
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீதிமன்ற தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய எச்சரித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் என்று ஜனாதிபதி வெள்ளிக்கிழமை இரவு அறிவித்த பின்னணியில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம்...
ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சாவகச்சேரி கண்டிவீதியில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான...
பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கமுடியும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு விடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் எப்போதும் தயாராகவே உள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரசிடமிருந்து அதற்கான அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கூறமுடியாது என்று தெரிவித்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த புதிய தேர்தல் திருத்தச் சட்டமூல ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறையை ஜனாதிபதி நேற்று அமைச்சரவையில் சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் முறைமையில்...
எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். இதன்படி எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல்,...
நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம்...
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள்...
Loading posts...
All posts loaded
No more posts