- Monday
- November 25th, 2024
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து புதிதாக மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளருமான நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைக்குமாறு...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது.எமது கொள்கையான தேசியம்,...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்களில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள்,டெலோ 1 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம்...
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்...
தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக வௌியான தகவல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அத்தியவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ். மாவட்டத்தின் முதலாவது வேட்பு மனு, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை(06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கை கட்சியான ஜனசக்தி பெரமுன கட்சியே திங்கட்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, ஊர்வலங்கள் கட்அவுட்கள் போஸ்டர்களை...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று தெரியவருகிறது. இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வேட்புமனு அனுமதி தொடர்பிலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை...
வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை. அதற்காக வருந்தவில்லை மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார் என்று அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கொழும்பு உட்பட வேறு பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்றும் கூட்டமைப்பின்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் களமிறங்குகிறார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்க...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சிறிது காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது. ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளை...
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயக பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு...
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ்...
"எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்ற நிலையில், அதில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரிவினரால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது'' - என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை,...
ஸ்ரீ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குழுவினருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என சு.கா மற்றும் ஐ.ம.சு.கூ ஆகிய கட்சிகளின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதேவேளை, ஐ.ம.சு.கூ.வின் அதிகாரத்தைப் பெற்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் மஹிந்த...
ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (02) காலையில் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம்...
Loading posts...
All posts loaded
No more posts