Ad Widget

ஐக்கிய தேசியக்கட்சி யாழ் மாவட்டத்தில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது!

இன்றைய தினம்  ஐக்கிய தேசியக் கட்சியும்  யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்பாளர்களாக திருமதி  விஜயகலா மகேஸ்வரன்,  ராஜலிங்கம் சிவசங்கர்,  சின்னத்துரை குலேந்திரராசா , செபஸ்ரியாம்பிள்ளை மரியதாசன்,  ரவீந்திரன் சுஜீபன், குமாரு சர்வானந்தா, இளையதம்பி நாகேந்திரராசா, முகமட் சுல்தான் ரகீம், வன்னியசிங்கம் பிரபாகரன், சின்னராசா விஜயராசா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.   பட்டியலில் மகேஸ்வரனின் தம்பி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் வேட்புமனு தாக்கல்

2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு  யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) சுப நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி அவரது தலைமையில்...
Ad Widget

இதுவரை 110 தேர்தல் முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 110 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்றிரவு வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல், அரச சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில்...

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பட்டியல்!

வன்னித் தேர்தல் மாவட்டத்தில்  6 இடங்களுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.    அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், சார்ள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் மாவட்டம்), றோய் ஜெயக்குமார் (வவுனியா மாவட்டம்), திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா (முல்லைத்தீவு) ஆகியோர் போட்டியிடவுள்ளனர். புளொட் சார்பில், வடக்கு...

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியல் ! இன்று வேட்புமனுத் தாக்கல்!

வேட்பாளர்கள் தெரிவானது மிகுந்த இழுபறி நிலைக்குப் பின்னர் பூர்த்தியடைந்துள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக தயாரிக்கப்பட்ட கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இறுதியாக தெரிவுசெய்யப்பட்டு மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிடவிருந்த சித்தாண்டியைச் சேர்ந்த சி.சாமித்தம்பி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக...

திடீரென பின்வாங்கினார் அனந்தி?

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தை கை விட்டு விட்டார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.எனினும் அவருடன் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் சந்தர்ப்பம் கேட்டு இருந்தார். ஆனால் வழங்கப்படவில்லை.தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தூது...

தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே! சிறீதரன்!

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன்  தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே என தெரிவித்துள்ளார்இச்செவ்வியின் போது காணாமல் போனோர்கள் தொடர்பான விடயம் ஐ.நா சபையில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை தரும் என தெரிவித்துள்ள அவர் முன்னாள் போராளிகள்...

கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பட்டியல்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகள் குழப்பங்களின் மத்தியில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்தக்கட்சியின் சார்பில் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன், அருந்தவபாலன் ஆகியோருடன் பெண் வேட்பாளராக மதினி நெல்சன் போட்டியிடுகிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இரண்டு...

திருக்கோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்படுத்திய பட்டியல்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் திருக்கோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்படுத்திய பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் என தெரிய வருகின்றது. இம்மாவட்டத்தில் 4 வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படுவர் வேட்பாளர் பட்டியல் 01. திரு இரா சம்பந்தன் 02. திரு துரைரெட்ணசிங்கம் 03. திரு ஜீவரூபன் 04. திரு கனகசிங்கம் 05. திரு...

அனந்தி சசிதரன் சுயேச்சையாக தேர்தலில் குதிக்கிறார்!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக  தெரிவித்துள்ளார்   மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும்,...

சுசில்,விமல், வாசு, பந்துல, டளஸ் உள்ளிட்ட பலருக்கு வேட்பு மனு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில்...

யாழ் மாவட்ட த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது !

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் த.தே.ம.முன்னணியின் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அம்பாறையில் அவர்கள் முதலாவதாக் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள த.தே.ம.முன்னணியின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்தரன் , பத்மினி...

2015 பாராளுமன்ற தேர்தல்- E-jaffna கருத்துக்கணிப்பு!

2015 பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் ஆதரிப்பது யாரை என்று ஒரு  கருத்துக்கணிப்பினை எமது இணையத்தளம் ஆரம்பித்துள்ளது . அதற்கான இணைப்பு http://www.e-jaffna.com/2015-srilanka-parliment-election-pre-poll இங்கே ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். வாக்களித்த பின்னர் முடிவுகள் மட்டுமே தெரியும்..மிகவும் நேர்மையான முறையில் தான் இந்த வாக்களிப்பு இடம்பெறுகின்றது.இம்முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவாக கொள்ள முடியாது . காரணம் உண்மையில்...

வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த : குருநாகலில் போட்டி!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

யாழ், வன்னியில் முன்னாள் புலிகள் வித்தி தலைமையில் களத்தில்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர். ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த...

ஓகஸ்ட் 5,6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

வடக்கில் போட்டியிடுவதற்கு முக்கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு...

யாழ் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்!

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க இம் முறை யாழ் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் தகுதி பெற்றுள்ளனர் என யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47...

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 வீத இடம் – மகளிர் விவகார அமைச்சு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் தமது வேட்புமனுக்களில் 30 வீதமான இடத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பட்டியலில் மூன்றில் ஒரு வீதத்தை பெண்களுக்காக ஒதுக்குமாறும் அமைச்சு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 5.8...

மனோ கணேசன்- த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு !

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் கருத்து கூறியதாவது, கூட்டமைப்புக்கும், எமது கட்சிக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts