- Monday
- November 25th, 2024
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் வன்னியில் வேட்புமனுவை கையளித்தனர். இதில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன், சிவரதி ராஜ்குமார், வீ.திகாஸ் விக்னேஸ்வரன், இந்திராணி விவேகானந்தன், செ.பாலசுப்பிரமணியம், க.பார்த்தீபன், ப.ஜனன், முன்னாள் போராளியான இ.பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஊடகங்களுக்கு கருத்துத்...
இலங்கை தமிழரசுக் கட்சி திருந்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என அனந்தி சசிதரன் கூறியுள்ளார் இதுதொடர்பிலான ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நான் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைய என்றுமே விரும்பியதில்லை. எனது கணவர் மற்றும் அவரைப் போன்று காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தேன். கடந்த வருடங்களில் தமிழ்த தேசியக் கூட்டமைப...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலை வர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கொழு ம்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர் பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் சுசில் ஹிந்தல்பிட்டியவும் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா, நாகேந்திரன் தர்ஷன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கூட்டணியின் பட்டியலில் உள்ள ஏனைய வேட்பாளர்களின் விபரம் வருமாறு வீரசிங்கம் ஆனந்தசங்கரி,...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை அதனால் தனது சார்பாக இன்னும் ஒரு சட்டத்தரணிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு தமிழ் தேசிய...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து...
யாழ்மாவட்ட தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் ஒரே பார்வையில் இலங்கை தமிழரசு கட்சி 1.மாவை சேனாதிராஜா 2.மதியாபரணம் சுமந்திரன் 3.கந்தையா பிரேமசந்திரன் 4.தர்மலிங்கம் சித்தார்த்தன் 5.சிவஞானம் சிறிதரன் 6.ஈஸ்வரபாதம் சரவணபவன் 7.அருந்தவபாலன் கந்தையா 8.மதினி நெல்சன் 9.ஆணந்தராஜ் நடராஜா 10. கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1.கஜேந்திரகுமார் காங்கேயர் பொன்னம்பலம் 2.செல்வராசா...
கறைபடியாத கைகளுடன் நாங்கள் இளம் கல்விமான்களுடன் களத்தில் இறங்கியுள்ளோம்.என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளரான அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். அனைவரும் மாற்றம் தேவை என்பர். நாம் கேட்கும் மாற்றம் வித்தியாசமானது.ஆனால் நாம் கேட்கும் மாற்றம் எங்களை போன்ற சாதாரண அரசியல் பின்புலம் இல்லாத கறைபடியாத கைகளுடன் யாழ்.மாவட்டத்தைச்...
இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரராஜாவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராக அங்கஜன் ராமநாதனும், மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் சந்திரசேகரனும்,...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக மாணவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழவொன்று யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. சுந்தரலிங்கம் சிவதர்ஷன், ஜெயரத்தினம் யதீசன், மங்களேஸ்வரன் கஜன், சுந்தரலிங்கம் சுதர்சன், இராசகுமார் கிரிஷாந், பந்துசேனா அருண்ராஜ், பரம்சோதிநாதர் பிரேந்திரா, சிவலிங்கம் லவகீசன், தங்கவேல் கிரிவேந்தன்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா,...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறது. ஏற்கனவே அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்புமனு தாக்கல் செய்கிறது,நேற்றிரவு முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்புமனுவில் கைச்சாத்திடார் யாழ்ப்பாணப்பட்டியல் வருமாறு (1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...
கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வி.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி களமிறங்கவுள்ளது. இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது. அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நன்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. அதனைத தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கு அதாவது 12.00 மணி தொடக்கம் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் வழங்கப்படவுள்ளது. இன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள்...
தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டார். பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகள்...
தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள், ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்ட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்றது. இதன்படி கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான...
தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒரு நாடு என்னும் கொள்கை அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்கும். மக்கள் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு...
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே என தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரித்தானியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். தான் முன்னாள் போராளிகள் பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல என்றும் தான் கதைக்கும்போது எந்த ஊடகவியலாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் அந்த செய்தி வேண்டுமென்றே தமது கட்சி அங்கத்தவர்களாலேயே பரப்பப்படுவதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார்....
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் யாழ் மாவட்டத்திலுள்ள எல்லா பொலிஸ் நிலையங்களையும் மூடி விடுவோம் என முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினரும், உதவி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் கூறினார். பொலிஸ் நிலையங்கள் எல்லாம் மக்களின் காணிகளில் தான் இயங்குகின்றன அனைத்து பொலிஸ் நிலையங்களும் அகற்றப்பட்டு அவர்கள் தமது சொந்த கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்...
Loading posts...
All posts loaded
No more posts