- Monday
- November 25th, 2024
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,“கடந்த அதிபர் தேர்தலில்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும். அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும்.என அவர்...
பொதுத் தேர்தல் தொடர்பில் 304 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகப்படியான 118 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள்...
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப்பணியகம் சனிக்கி்ழமை (18) திறந்துவைக்கப்பட்டதோடு திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.திருகோணமலை திருஞானசம்பந்தன் வீதியில் அமைந்துள்ள நடுவப்பணியகத்தை தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருமலை மாவட்டமுதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் திருமலை லட்சுமி நாராணயன் கோயில்உரிமையாளர் ராதாகிஸ்ணன் ஆகியோர்...
தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் வேட்பாளர்களை தமிழ்மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் – சி.கஜேந்திரகுமார்
தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார். கட்சியின் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து பேசுகையில் தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே...
"பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயுதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும் - தீர்வைப் பெற்றுக்...
நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே 'ஆணையாளருக்குக் கூறுங்கள்' என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும்...
தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியாகிஉள்ளன. வாக்காளர்கள் சைக்கிள் சின்னத்தின் முன்னாலும் பின்னர் விரு்ம்பிய 2 வேட்பாளர்கள் முன்னாலும் வாக்களிக்க முடியும் (1) விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்) (2) சி.ஆனந்தி (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன்...
இன்று கொழும்புமாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.அதில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள மூவின மக்களையும் ஒருங்கிணைத்து யாதி பேதங்களையும் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து தமிழர் விடுதலைக்கூட்டணி ஜனநாயக கட்சியோடு...
தேர்தல் காலத்தில் அபேட்சகர்களும் ஊடக நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என பொலிஸார் ஊடகங்களில்...
நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் முன் முக்கிய போட்டித்தெரிவுகளாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இருக்கின்றன. வழமைபோல இணையத்தளங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இன்று ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைந்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களின் கருத்துக்கள் வாக்காளர்களிள் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக...
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04, ஈஸ்வரபாதம் சரவணபவன்-05,...
சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வருகின்ற 18.7.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கலை அம்பாறையில் ஆரம்பித்து வன்னியில் முடித்தது. தற்போது பிரச்சாரக்கூட்டத்தினை தமிழர்களின் கோட்டை எனப்படும் கோணமலையில் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் திருகோணமலையில் முன்னணியின் தலைமைச்செயலகமும் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. மக்களை திரண்டுவந்து தமிழ்தேசிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை...
இலங்கைத் தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் விபரம்.. 01. திரு.சி.க.சிற்றம்பலம் 02. திரு.சொலமன் சிறில் 03. திரு.மயில்வாகனம் தேவராஜ் 04. திரு.சூ.செ.குலநாயகம் 05. திரு.வி.கனகநமநாதன் 06. திரு.அ.குணபாலசிங்கம் 07. திருமதி.நாச்சியார் செல்வநாயகம் 08. திரு.அந்தோனிப்பிள்ளை மேரியம்மா 09. திருமதி.மேரிகமலா குணசீலன்
நாம் கடந்த 5 வருடங்களாக என்ன செய்தோம் என்று கேட்பவர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு போராட்ட களத்தினை திறந்து வைத்தவர்கள் நாமே. முல்லைத்தீவு கேப்பாபிலவில் முழுக் கிராமம் பறி போன போது தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று சொல்லிக் கொண்டோர் மௌனமாக இருந்தனர். நாமே அம்மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினோம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல்...
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவு செய்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6,151 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3,653 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்கள் சார்பாக 2,498 வேட்பாளர்களும்...
Loading posts...
All posts loaded
No more posts