- Monday
- November 25th, 2024
பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தலொன்றை...
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நாளை காலை 9 மணிக்கு ஆஐராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.கடந்த 31ம் திகதி சாவகச்சேரி நகரில் மேற்படி கட்சியினர் பிரசாரத்திலீடுபட்டிருந்த நிலையில் தேர்தல் சட்டத்திற்கு மாறாக பிரசாரத்திலீடுபட்டதாக கூறி கட்சியின் வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின்...
வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள் பணியாற்றி வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது கட்சி அலுவலகங்களை நோக்கிச் செல்கின்றனர். வேலைவாய்ப்பு தேவையை நாடி வரும் இவர்களை அந்தக்...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது தெரிவு செய்த கட்சியின் பெயர் மற்றும் இலக்கத்துக்கு முன்பாக அல்லது சுயேற்சை குழுவின் இலக்கத்தின் முன்பாக ("X") அடையாளமிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். அதற்கு பிறகு ஏற்றுக்கொண்ட கட்சியின் அல்லது சுயாதீன குழுவின் வேட்பாளர்கள் மூன்று பேரின் இலக்கங்களுடைய சதுரத்தில் ("X")...
இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதல் ஆதரவு இருப்பதாக சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேட்டிவ்ஸ் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எந்த விஷயங்களில் கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள், யாரை பிரதமர் பதவிக்கு கூடுதலாக ஆதரிக்கிறார்கள், எந்த ஊடகம் பிரச்சாரங்களில்...
சர்வதேசஅரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம்கட்டும் பொறுப்புவாக்காளர்களாகிய உங்களுக்குஉண்டுஎன்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி. என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடக அறிக்கை மூலம் கோரியுள்ளார் அவரது அறிக்கையின் முழு வடிவம் 2013 வடமாகாண மக்கள் என்னை மாகாணசபைக்கு அமோகமான வாக்குகள் மூலம் தெரிந்தெடுத்தார்கள்....
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை ஜநா முன்னெடுக்குமானால் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க தாம் விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக ஜனநாயகப்போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தினில் இன்று இடம்பெற்ற அவ்வமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அதன் ஊடகப்பிரிவினர் இனப்படுகொலைக்கான விசாரணை அறிக்கையினில் விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன....
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் பரப்புரைப் பணிகளால் அசௌகரியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள்,...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் கட்சிகள் இந்தியாவின் தேர்தல் பிரசாரங்களைப் பின்பற்றி, இசைக் கச்சேரிகள் நடத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்;ப்பாணம் வருகை தந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார நிகழ்வில், இந்தியாவில் பிரசித்திபெற்ற சுப்பர்...
வருமானத்துக்காக இனமானதையும் தன் மானத்தையும் விற்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி ஒரு போதும் தயாராக இல்லை என்பதை இந்த வேளையில் தெரிய படுத்தி கொள்கின்றேன் என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்றதன் பின்னர் தேசிய பட்டியலில்...
த.தே.ம.முன்னணி வேட்பாளர் கோகிலவாணி விஞ்ஞாபன நிகழ்வில் ஆற்றிய உரையில் இது முடிவு செய்ய வேண்டிய நேரம். நாங்கள் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இருக்கின்றோம் என தெரிவித்தார் அவரது உரை முழுமையாக.... பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் தாயக உறவுகளே, உங்களுக்கு என் வணக்கம்! காலத்துயர் சுமந்தவர்களாக் கண்களில் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே தேக்கி வைத்துக் கொண்டு இங்கே...
தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்ற 4 விடயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், போர் நிறைவடைந்த பின்னரும் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை சிதைப்பதற்காக, தேசத்தின் அங்கீ காரத்திற்கு அடிப்படையான விடயங்கள் மீதான கட்டமைப்புசார் இன அழிப்பு நன்கு திட்டமிட்டவகையில்...
ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. அதன்படி, பொலிஸ் நிலையங்களிலும் வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் இன்று தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. குறித்த தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. தபால் மூல வாக்காளர்களின் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில்...
தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பு நிலையத்தினருகில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டால் குறித்த இடத்தின் வாக்கெடுப்பு உடன் ரத்துச் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வேட்பாளர்களின் பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறும்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2015 - தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய...
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது மாபெரும் பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுவிடம் அமைந்துள்ள தீருவிலில்...
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஷேட குழுவொன்றை அனுப்பி வைக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளதோடு எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளையதினம் கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக...
எமக்கெதிராக பெரும்பான்னை அரசு தொடுக்கின்ற அடக்குமுறைகளை நாம் தடுக்க வேண்டுமானால் எமது தேசம் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கேள்வி நேரம் எனும் நிகழ்வில் தமது கட்சியின்...
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்தது, புலம் பெயர் தமிழர்கள் மற்றும், ஈழத்தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் காலூன்ற முனையும் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர்...
1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் வீட்டிற்கு வீடு சென்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது (ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை இல்லை). அத்தோடு பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் அண்மையில் கட்சிகள் யாவற்றினதும் சம்மதத்துடன் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பொது இடங்களில் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்கும் அறிவித்தலை தேர்தல் ஆணையாளர்...
Loading posts...
All posts loaded
No more posts