Ad Widget

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 61 வீதம் வாக்குப் பதிவு!

காலை 7மணிமுதல் 4மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  61 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 51.8 வீதமும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில்  70.9 வீதமும் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. வன்னி – 70% மட்டக்களப்பு – 60% திருகோணமலை – 75% திகாமடுல்ல – 65% கொழும்பு – 65% கம்பஹா – 70%...

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது

தேர்தல் வாக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டை, சட்டவிரோதமான முறையில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவரைக் இன்று காலை (17)  கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ லுனவில பௌத்த கனிஷ்ட வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வைத்து, லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது  இளைஞர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்...
Ad Widget

முதலாவது தபால்மூல வாக்களிப்பு முடிவு இரவு 7 மணிக்கு முன்னர்

8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வதாக  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள்...

தமிழ் தேசிய அரசியலில் இத்தேர்தல் ஒரு திருப்புமுனை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களது தேசிய அரசியலைப்பொறுத்தமட்டில் இத்தேர்தல் ஒரு திருப்புமுனை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.இன்று(17)யாழ்ப்பாணத்திலுள்ள வக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கை செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது நிலைப்பாட்டை நாம் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் எமது...

வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் இன்றும் பெறலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17) ஆம் திகதியும் தத்தம் தபால் நிலையங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று (16) ஞாயிற்றுக்கிழமையும் மாலை...

அனைவரும் வாக்களியுங்கள்

வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் அவர்களுடைய பொறுப்பாகும். வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காமல் வாக்களிப்பு நிலையத்துக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். போதை மற்றும் வன்முறைகள் இன்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டங்களை உருவாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற இந்த தேர்தலில் சட்டத்தை மீறுகின்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின், சட்டத்தை...

வாக்களிப்பை சீர்குலைக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு! – பொலிசாருக்கு அதிகாரம்

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான...

தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்

நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தும் 'கபே' அமைப்பு தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை...

பாரளுமன்ற தேர்தல் தொடர்பிலான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

குறுந்தகவல் மற்றும் இணையத்தளம் ஊடான தேர்தல் பரப்புரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பரப்புரைகளைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தேர்தலுக்கான பிரதான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள போதிலும், இணையத்தளம் ஊடான பரப்புரைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கையடக்கத் தொலைபேசியூடாக குறுந்தகவல் மூலம் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...

வாக்காளர்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளிக்கச் செல்லும் வாக்காளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் உறுதியாகவும் அவதானமாகவும் இருத்தல் அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு தேர்தல் வன்முறைகளும் முறைக்கேடான தேர்தல் பிரசாரங்களும் இடம்பெற்றுள்ளதாக, உள்ளூர் கண்காணிப்பு குழுக்களின்...

தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார். எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என...

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை!

தேர்தலில் வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் போதியளவு கால...

இன்றுடன் ஓய்கிறது பிரசார யுத்தம்!

எதிர்ரும் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,...

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!!

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...

வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம்!

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை தடுப்பதற்காக விசேட அலகொன்றை தாபிக்க தீர்மானித்துள்ளது. அவ்...

தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கடற்படையினர் கொண்டுசெல்வர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் தீவுப்பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், கடற்படையினரின் பாதுகாப்புடன் அவர்களின் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். 'எதிர்வரும் 16ஆம் திகதி காலை முதல் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு...

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரச அலுவலர் தொடர்பில் விசாரணை

தேர்தல் விதிமுறையை மீறி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சார்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈடுபட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஊழியர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (11) சாவற்கட்டு பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்...

ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், தேர்தல் சட்டத்தை மீறியோர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளோர், சுற்றாடல் அழிவு ஏற்படுத்தியோர்,...

வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts