- Monday
- November 25th, 2024
2015-ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்களிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்....
தேசிய இளைஞர் சேவை சபை, இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரையில் 334 பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான...
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிக்க வசதியேற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சபாநாயகரிடம் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 22 பாரளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அன்மையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை...
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குரிமையினை இழந்தவர்கள் அது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் இந்த விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்கள் தங்களது...
இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்ட அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சி அந்த இரண்டு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் நவம்பரில் 335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிய வருகின்றது அது தொடர்பிலான அறிவித்தல் சனாதிபதியால் வெளியிடப்பட உள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 210 சபைகள் பதவிக்காலம் முடிந்துள்ளன மிகுதி ஒக்டோபர் 31ம்திகதி பதவிக்காலம் பூர்த்திசெய்கின்றன.
யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலானது உண்மையாகவும் நேர்மையாகவும் நடை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது....
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நிகழ்ந்த கவனிக்கத்தக்க சில சம்பவங்கள் நடந்தேறின. அவற்றில் சில பின்வருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலைப்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இளைஞர், யுவதிகள் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தோல்வியடைந்தார். கிளிநொச்சியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்...
தேர்தல் காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவர் உட்பட அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்கள் என இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைக்கு அனுப்பியமை தொடர்பில் மேற்படி பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கபெற்றிருப்பதாக கனகராஜ் கூறினார். அதேபோல்,...
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார் பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் க.அருந்தவபாலனின் விருப்பு வாக்கில் மோசடி நடந்துள்ளதாக தென்மராட்சி மக்கள் சமூகம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் முறையீடு செய்துள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தென்மராட்சி மக்கள் சமூகப் பிரதிநிதிகள் சுமார் முப் பத்தைந்து பேர் மாவை சேனாதிராஜாவைச் சந்தித்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நிறைவடையும் வரையிலும் தேர்தலில் தொடர்பில் பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் சில... ரணிலுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, நடந்து முடிந்த தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவர், 500,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
இலங்கை பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகிவிட்டது இதன்படி கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு ஐக்கியதேசியக்கட்சி( 45.66 %) - 106 ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு (42.38%) - 95 தமிழரசுக்கட்சி (4.62%)- 16 மக்கள் விடுதலை முன்னணி (4.87%) - 6 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(0.40%) -1 ஈழமக்கள் ஜனநாயக கட்சி (0.30%) - 1
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது யாழ் மாவட்ட உறுப்பினர்கள் (5) 1. சி.சிறீதரன் (72058) 2. மாவை.சேனாதிராசா (58782) 3. த. சித்தார்த்தன் (53740) 4. எம்.ஏ. சுமந்திரன் (58043) 5. ஈ.சரவணபவான் (43289) வன்னி மாவட்ட உறுப்பினர்கள்(4) 1.சாள்ஸ் நிமலநாதன்...
யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் 2. மாவை.சேனாதிராசா 3. த. சித்தார்த்தன் 4. எம்.ஏ. சுமந்திரன் 5. ஈ.சரவணபவான் 5வது இடம் நீண்ட இழுபறியின் பின் சரவணபவானுக்கு வழங்கப்பட்டது...
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 83,638 வாக்குகள் 02 ஆசனம் தமிழரசுக் கட்சி - 45,894 வாக்குகள் 01 ஆசனம் ஐமசுகூ - 38,463 வாக்குகள் 01 ஆசனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, தமிழரசுக் கட்சி - 207,577 வாக்குகள் 05 ஆசனம். ஈபிடிபி - 30,232 வாக்குகள் 01 ஆசனம். ஐதேக - 20,025 வாக்குகள் 01 ஆசனம்
காலை 7மணிமுதல் 4மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 61 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 51.8 வீதமும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 70.9 வீதமும் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. வன்னி – 70% மட்டக்களப்பு – 60% திருகோணமலை – 75% திகாமடுல்ல – 65% கொழும்பு – 65% கம்பஹா – 70%...
Loading posts...
All posts loaded
No more posts