- Wednesday
- April 23rd, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்குள் அரச சேவையில் ஈடுபட்டிருக்க முடியாதென உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது....

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாது, தமது தீர்மானத்தை அறிவிக்கும் மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில், கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

புதிய வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும் நாளை (10) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதிருந்தாலோ அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை காலாவகாசம் வழங்கப்படவுள்ளதாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய...

வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நடப்பு ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த...

2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, வாக்காளர் திருத்தத்திற்கான படிவங்களை நேற்றுமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் குறித்த படிவங்கள் கிராம சேவை உத்தியோகஸ்தர்களூடாக மீள சேகரிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாறாக பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு குறைக்கப்படும் ஒருவரது சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும். யாழ்ப்பாண...

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, மேலதிக தாமதங்களின்றி நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என, நாட்டில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது இது குறித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லி...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சகல பத்திரங்களுக்கும் அமைச்சரவையின் அனுமதி விரைவாக கிடைக்கப் பெறுமாயின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுாராட்சி...

இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்தம், இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் அவலநிலைமை நாட்டில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இவர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது....

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை கோராமல் விட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்-பௌத்தரினால் வேட்பாளருக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டு வருவது குறித்து தேர்தல்கள் ஆணையகம் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட...

யாழ்ப்பாணம் பிரதான மாட்டிறைச்சி கடைத்தொகுதியில் மனித பாவனைக்குதவாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கழிவு இறைச்சிகளை யாழ்ப்பாண மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். நேற்றய தினம் யாழ்.மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலொன்றினையடுத்து விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கடையொன்றின் களஞ்சியறையில் குளிர்சாதன பெட்டியொன்றில் இருந்தே இந்த...

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெற உள்ளது. காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நாடு பூராகவும் 661 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது. தேர்தலுக்காக 916 இளைஞர் யுவதிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதுடன், வாக்களிப்பதற்காக 340,000 வாக்காளர்கள்...

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அடுத்த 27 ஆம் திகதி கிடைத்ததும் 28 ஆம் திகதி அதனை வர்த்தமானியில் வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது பற்றி பாராளுமன்றக்குழு ஆராயவுள்ளது. இதற்கென விசேட பாராளுமன்ற குழுஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த வாய்ப்புகள் உள்ளதாகவும், கிழக்கு, வடமத்திய...

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதார முறையில் அரசியலிலும் பெண்களின் பங்களிப்பானது அதிகரிக்கப்படவேண்டும் என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

All posts loaded
No more posts