- Tuesday
- April 22nd, 2025

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நூறு சதவீதம் பெண்களை மாத்திரம் கொண்டு இயங்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் இரண்டு சதவீதம் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதில் கண்காணிப்பாளர்களாவும் பெண்களே நியமிக்கப்படுவர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து...

மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார். தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்....

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மேலதிக ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச...

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் நல்லூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் 04 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து சபைகளின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கொள்ளும் இறுதி தினம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில்...

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அன்னலெட்சுமி...

யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பாக 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், வலி. வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என அந்தக் கட்சியின் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன. வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் இம்முறையும் போட்டியிடுவதுடன், மாவை சேனாதிராசாவின் மகனும் போட்டியிடுகிறார். போர்க்காலத்தில் இந்தியாவில்...

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முஸ்ஸிம் காங்கிரஸ் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் மன்னாரில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில் மு.காவின் உயர்மட்ட குழுவினர் விசேட உலங்குவானூர்தி மூலம் கொழும்பில் இருந்து மன்னார்...

பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார். வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றிற்கு மேல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டி ஒட்டப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டி அவற்றிற்கு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின்...

வடக்கு – கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் வரும் 21 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியாகும். இந்த நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்மட்டத்தினர் நேற்றிரவு...

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன எனவும், அவர்களின் ஆதரவுடனேயே வித்தியைக் களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன. தமிழர்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்தமானி எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து தான் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடித்தை, கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு மாநகர சபையாக உள்ள யாழ். மாநகர...

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல,...

All posts loaded
No more posts