- Monday
- April 21st, 2025

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒரு புறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு வருகின்ற நிதியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாமல் திருப்பி அனுப்புகின்றார் என்றும்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் மற்றும் ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிமுதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதோடு, காலை 9 மணிமுதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் ஏற்கனவே கடந்த...

இனத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என அவர்...

இலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை, அடித்துத்தான் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கான இடைக்கால ஏற்பாடாகவே தலைவர் பிரபாகரன் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்தியிருந்தார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு மற்றும் பிரசாரக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில்...

அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனத்தினை...

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்குரிமையினை போராட்ட ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். எமது வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமைப் போராட்டமானது...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியில் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும் நகரசபையின் 5 ஆம் வட்டாரத்தில் இராமச்சந்திரன் ஆகிய இரு வேட்பாளர்களும்...

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர், “எங்கள் தலைவன் பிறந்த வரலாற்றுப் பெருமைவாய்ந்த இந்த...

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது, அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி...

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 288 வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வைத்து வேட்பாளர் உதயசிறி தாக்கப்பட்டார் என்று முறைப்பாடு...

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் 120 வாக்காளர்கள் நேற்று தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதன்போது மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களித்தனர். குறித்த மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 122 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றுள் 26 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 96...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இதனையடுத்து...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின், யாழ்.மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ‘சுத்தமான பசுமை மாநகரம்’ என்ற தொனிப்பொருளினாலான குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா வெளியிட்டு வைக்க, தமிழ்...

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு...

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற போது...

முப்பது ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்காததால், சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தினை கொண்ட சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாடி விருந்தினர் விடுதியில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . மேலும் அவர் கூறுகையில், “கடந்த காலங்களில்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 17.01.2018 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் பற்றித் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் '”நாங்கள் ஒன்றை...

All posts loaded
No more posts