கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் : சிறிகாந்தா வேண்டுகோள்

வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . யாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து...

யாழ். மாநகர சபை மேயராக மணிவண்ணன்!- சந்தர்ப்பத்தை வழங்குவாரா டக்ளஸ்?

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆட்சிக்கு ஈ.பி.டி.பி. யினர் வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையை ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ள 10 ஆசனங்களே ஆட்சியை தீர்மானிப்பவையாக அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்திறன்...
Ad Widget

தேர்தல் முடிவுகள் !

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் : யாழ் மாவட்டம் (நன்றி:  வாகீசம் இணையம்) கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது. பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக்...

வடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்.  வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78% மன்னார்: 80% வவுனியா : 70% திருகோணமலை : 85%...

த.தே.கூ- ஜ.தே.க கட்சிக்கும் இடையில் முறுகல்!!!

காரைநகர் பகுதியில் வாக்களிக்கச் சென்ற மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சிக்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. காரை நகர் பகுதியில் இன்று வாக்களிக்கச் சென்ற மக்களிடம் ஜக்கிய தேசிய கட்சியினர் தமது தேர்தல் பிரச்சாரத்தை செய்ததுடன், தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த...

ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல்!!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச வேட்பாளர் மு.கிருஸ்ணபகவான் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கூட்டம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேளையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிருஸ்ணபகவான் தனது இல்லத்தில் இருந்த சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

இறுதி நேரம் வரை காத்திருக்காது உடனே சென்று வாக்களியுங்கள்!!!

"உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு இன்று(10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும். இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல்...

யாழில் இதுவரை 22 வீத வாக்குகள் பதிவு!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை 22.05 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளில் நடைபெற்று வரும் இந்த வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக தமது வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர். அந்தவகையில் வலி.மேற்குப்பிரதேச சபையில் மக்கள் தமது வாக்ககுளை...

கூட்டமைப்பு வேட்பாளர் மானிப்பாயில் கைது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன துண்டறிக்கைகளை வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்இருவரையும் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார்...

தேர்தல் கடமையிலீடுபட்ட வாகனம் விபத்து : மூவர் படுகாயம்

முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

யாழில் ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் வாக்களித்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்படி யாழ்மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் காலை ஏழு மணியில் இருந்து வயோதிபர்கள், இளைஞர்கள் யுவதிகள், என பல்வேறு தரப்பினர் தமது வாக்குகளை பதிவுசெய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, வாக்குச் சாவடியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!!

குடிபோதையில் வாக்களிக்க வருபவர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற விதத்தில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவன் குணசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள், அனைத்து...

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் பின்வருமாறு,

வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டைகள்

புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு ,அரச ஊழியர் அடையாள அட்டை , ஓய்வூதிய அடையாள அட்டை,...

உள்ளுராட்சிமன்ற தேர்தல் : முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்கா அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள்...

வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன. யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக விளங்கும் யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் பகிர்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில்...

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு?

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு? என்ற தமீழீழ விடுதலைப்புலிகளின் வசனத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடை நாமத்தினாலும் நல்லூர் கிட்டுப்பூங்கா கரகோசத்தால் அதிர்ந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸ் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார். இவ்வளவு காலமும் நாங்கள் கஷ்டப்படது...

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.கிரிதரன் புதன்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.அவர் தற்போது மந்திகை வைத்தியசாலையின் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்திகை வைத்தியசாலை பணியாளரான அவர் கிரி என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்திருந்தார்.யுத்த நெருக்கடியான காலப்பகுதியில் அவரது சேவை...

கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்கத்தொலைபேசிப் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்லுக்கான வாக்களிப்பு இடம்பெறும் பகுதியில் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தல் , காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல் மதுபானம், அருந்துதல் போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நாளை...

யாழில் தேர்தல் கடமையில் 6,500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தபடவுள்ளனர்: அரசாங்க அதிபர்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts