Ad Widget

மேலும் இரு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்!

மேலும் இரு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி ரஸ்நாயக்கபுர மற்றும் கொபேகன ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஊரடங்குச் சட்டமானது நாளை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

கிழக்கில் ஹர்த்தால் – 3 அசம்பாவிதங்கள் பதிவு!

கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலின்போது 3 அசம்பாவிதங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அங்கொடையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து சர்தாபுர எனும் பகுதியிலும் மூதூர் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஆண்டான் குளம் பகுதியிலும் இனந்தெரியாத நபர்களது கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது. மேலும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இனந்தெரியாத நபர்களால்...
Ad Widget

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்: 200 சிறுவா்கள் பாதிப்பு!! செஞ்சிலுவை சங்கம் அதிா்ச்சி தகவல்!!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் சுமாா் 200 குழந்தைகள் தமது குடும்ப உறுப்பினா்களை இழந்துள்ளனா். என செஞ்சிலுவை சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர். மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பொருளாதார...

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீர்கொழும்பிற்கு விஜயம்!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீர்கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி...

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராடுவோம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திருப்திக்கொள்ள முடியவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இடம்பெற்றுள்ள இந்த அசாதாரண நிலைமைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பேராயர் இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்...

நீர்கொழும்பில் 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 20 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது

ஒரு தொகை வெடி பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.

பள்ளியில் இருந்து 47 வாள்கள் மீட்பு!!

கொம்பனித்தெரு-பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ​இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சஹரான் மௌலவி ஷங்ரிலாவில் இறந்துவிட்டார்! – ஜனாதிபதி

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹரான் ஹாசிம் என்ற மௌலவி இறந்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஷங்ரிலா நட்சத்திர விடுதி தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அதனை உறுதிப்படுத்துவதற்கு...

சற்றுமுன் மீண்டும் குண்டு வெடிப்பு; பொலிஸ் அதிரடிப்படை குவிப்பு!

கம்பஹா பூகொட நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் சிறிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். குறித்த நீதிமன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியின் குப்பை மேட்டில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்லதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்புச் சம்பவத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் குறித்த இடத்திற்கு அதிரடிப்படையினர் சென்றுள்ளதுடன் பொலிஸார்...

‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வெடிபொருள்களுடனான வாகனங்கள் நடமாட்டம்

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,...

தற்கொலைக்குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது!

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய தற்கொலைக்குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தான் தன் மதத்திற்காக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார். இயேசுபிரானின்...

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் வெடிமருந்துகள் மீட்பு!

கொழும்பு புறக்கோட்டை பஸ்தியான் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெட்டோனேற்றர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றது. மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் குறைந்தளவு அமுக்கத்தையுடைய இந்த வெடிமருந்துகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துக்காக பேருந்து நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கூறினர்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் – ரணில்

இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது...

இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்

தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

தென்னிலங்கையை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள குள்ள மனிதர்கள்

நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) குள்ள மனிதர்கள் தங்களை தாக்கியதாக சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகளைப் பதிவு செய்துள்ளனர். மாத்தறை, தொட்டமுன பகுதியைச் சேர்ந்த...

பதுளையில் நிலநடுக்கம்!

பதுளை ஹாலில வெலிமட மற்றும் பசறை பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) காலை இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய 65 வயதுடைய கண்தெரியாத முதியவர்!!!

25 வருடங்களாக ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய ஹம்காவை வசிப்பிடமாக கொண்ட 65 வயதுடைய கண்தெரியாத முதியவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படும் போது வங்கி கணக்கில் 5 இலட்சம் ரூபாவும் வைத்திருந்துள்ளார். ஹம்பகா- கொழும்பு கேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளிடம் பணத்தினை...

ரவிராஜ் கொலைக்கு கருணாவிற்கு 5 கோடி வழங்கினார் கோட்டா?

யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த தொகை கருணா தரப்பினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ரவிராஜ் கொலை...

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்...
Loading posts...

All posts loaded

No more posts