- Wednesday
- January 8th, 2025
தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவைத் தொடர்ந்து அவை மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில இடங்களில் வீதிகளின் தமிழ் பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்டமை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் பிரதமர், இதுகுறித்து விசாரணையை நடத்துமாறும் குறித்த பெயர் பலகைகளை...
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், தாஜூதீன்் படுகொலை உள்ளிட்ட பெரும் குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடற்படை, இராணுவ அதிகாரிகள் மீதான முக்கிய குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்திவந்த மூத்த பொலிஸ் அத்தியட்சர்...
கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் இன்று (புதன்கிழமை) காலை காற்றில் 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக அந்த நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையான...
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித்...
கோகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு, சிறுபான்மை மக்களாகிய மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று...
கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுப் படிமங்களின் செரிவு அதிகரிக்கக்கூடும் என தேசிய கட்டிட ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் வளி தரக்குறியீடு தற்போது 107ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இந்நிலமை இன்று மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு நகரின் தூசு படிமங்களின் செரிவு...
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏனெனில் தூசு துகள்களின் செறிவு காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின்...
தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுவோர் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள்...
இலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வருகின்ற தேர்தல்களில் அதற்கான சாத்தியம் இல்லை எனிலும் 2020 இல் அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது இலங்கையின் இடம்பெறும் தேர்தல்களின்போதும் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை ஏற்படுத்தினால் அதன்போது எவ்வகையான இலத்திரனியல் பாதுகாப்புக்களை மேற்கொள்வது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பணிமனையில் இடம்பெறும்...
* அரசியல் சதிப் புரட்சியை முறியடித்தேன். * பிரதமர் ரணிலைக் காப்பாற்றினேன். * ராஜபக்சக்களின் வலையில் சிக்கவில்லை. * கட்சிக்குத் துரோகமிழைக்கவில்லை. * தந்தையின் வழியில் பயணிப்பேன். * ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பேன். * நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன். "ஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சகல...
தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான...
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறுவதில் எவ்வித உண்மைகளுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சுப்...
இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வை இரத்து செய்ய சூழ்ச்சி இடம்பெறுவதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் நேற்று உண்ணாவிரதப்...
நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 402 ஐபோன்கள், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட மேலும் சில தொடர்பாடல் உபகரணங்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தங்கியிருந்த 2...
பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இங்கு...
நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர்...
நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தில் 05 மாடிகள் கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு இனந்தெரியாத சில நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்....
கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த வீரச் செயலை செய்துள்ளார். கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தில் 500க்கு அதிகமான...
கழுத்துறை மாவட்டம் பதுரலிய என்ற இடத்திலிருந்து 13 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் இருந்த பொதி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலையின் காவலாளி வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பொதியில் கைக்குண்டுகள் இருப்பதைக்கண்டு அவர்றை மீட்டுச் சென்றனர். தற்போது அதுகுறித்த விசாரணைகளில் பொலிஸார்...
Loading posts...
All posts loaded
No more posts