- Sunday
- February 23rd, 2025

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை நேற்று 2020.10.13 அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா...

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் கடந்த 9ம் திகதி அன்று அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில்...

திவுலபிடிய மற்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. நேற்று மாத்திரம் 19 கொரோனா தொற்றாளர்கள் குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 18 பேருக்குமே இவ்வாறு கொரோனா...

கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார...

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். “நாட்டின் பல்வேறு பகுதிகளில் 16 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு கோரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது” என்று அவர்...

கம்பஹா – மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியமைக்கும் இந்தியர்களுக்கும் தொடர்புண்டு என கூறுவது உண்மைக்கு புறம்பான விடயம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய முதியவர், ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பித்துள்ள நிலையில் அவரைக் கண்டறிவதற்கு உதவுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது. இல. 307 வத்த, பெலியகொட பகுதியைச் சேர்ந்த தோன் சரத் குமார என்ற குறித்த நபரை அடையாளம் கண்டால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'அபே கம' வளாகத்தில் நேற்று முன்தினம் (2020.10.02) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தைவிட கல்வி சீர்த்திருத்தம் இந்நாட்டின் எதிர்காலத்தில்...

நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...

மக்களுக்கும் நாட்டுக்கும் நல்வாசி வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புனித பூமியில் நேற்று (25) இரவு இடம்பெற்றது. கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் கதிர்காமம் ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் ருகுனு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கருமான சங்கைக்குரிய கொபவக தம்மின் தேரர் அவர்களை சந்தித்து...

கோரோனா வைரஸ் தொற்றுள்ள அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குவரை நீடிக்கப்படுல் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது...

இலங்கை நடுத்தர மற்றும் சிறிய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் தொகுதியொன்று பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் வைத்தியசாலைச் சேவைகள் சபையின் பணிப்பாளர் சங்கைக்குரிய ரஜவெல்ல சுபுதி தேரர் அவர்களின் ஆலோசனைப்படி கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் மற்றும் இலங்கை...

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெலியத்தை அபிநவாராமை விகாரையில் நேற்று (2020.04.15) எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார். முற்பகல் 09.17 எனும் எண்ணெய் தேய்ப்பதற்கான சுபநேரத்தில் அபிநவாராமாதிபதி போலானே ஆனந்ததேரர் அவர்களினால் பிரதம அமைச்சர் அவர்களுக்கு சம்பிரதாயப்படி எண்ணெய் தேய்க்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடித்து இந்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், பாராளுமன்ற...

குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலமாக வெலிக்கடையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிப்பதாக தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று (10) மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில்...

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இலங்கைப் பெண்ணொருவர் தொற்று நோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று...

விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப் படைப் பேச்சாளர் கெப்டன்...

நாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது காற்றின் தரம் 158 சுட்டியாக உயர்வடைந்து மாசடைந்து காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தூதரகத்தில் அமைந்துள்ள வளிமண்டலத்திலுள்ள வளியின் தூய்மை குறித்து ஆராயும் நிலையம் இது தொடர்பாக அறிவித்துள்ளது. இதேவேளை புத்தாண்டை...

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெறுவதற்காக வருபவர்களுக்கு துரித கதியில் சேவையை பெற்றுக் கொடுப்பாதற்காக அதிவேக 'Fast Track System' ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிலையத்திற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க...

All posts loaded
No more posts