- Thursday
- January 16th, 2025
எஸ்.எல்.எஸ் (SLS) தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் (ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு, இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், இன்று அறிவித்தது. அதனால், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவதானமாகக் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களிடம், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், அறிவுறை வழங்கியுள்ளது. தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள்...
தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இன்றுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 ஜனவரி 2 ஆம் நாள் திருகோணமலை,...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்போருக்கு இடையிலான தீர்க்கமானதொரு கலந்துரையாடல், இம்மாதம் இரண்டாவது வார காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பவரொருவர் தெரிவிக்கின்றார். இந்தக் கலந்துரையாடலின் போதே, அரசாங்கத்தை விட்டு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், எதுஎவ்வாறு இருப்பினும் தானே நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிறந்திருக்கும் புதுவருடத்தில் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, ஊடவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதன்போது, 2017ம்...
பொதுமக்களுக்கு கூடுதலான நன்மைகளை வழங்கும் பொருட்டு நேற்றைய தினத்திலிருந்து லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் லொத்தர் சீட்டுக்களின் விலை தொடர்பாக இடம்பெற்ற ஊடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று...
“மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை எனக்கு வழங்குவதாக வெளிவரும் செய்தி தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பில்...
உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரிடம் தெரிவித்துள்ளார். இது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல என்றும் தேரரிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்தார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும்...
புதிய ஆண்டிலாவது மைத்திரி – ரணில் அரசு என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். என்னைப் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு அரிசித் தட்டுப்பாட்டுக்கு சிறந்த தீர்வினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் உள்ள சிறீவர்த்தனாராமய விகாரையில் நேற்று நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,...
ஜனநாயகம் மற்றும் ஒழுக்கநெறி மிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உண்டு என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய நல்லாட்சி...
இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில்...
நோயாளிகளின் நலன்கருதி அவர்களுக்கான மருந்துப் பொருட்களினதும், பயன்படுத்தப்படும் வைத்திய உபகரணங்களினதும் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச மருத்துவத்தறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன மேலும் தெரிவித்தாவது: முதற் கட்டமாக செயற்கை கண் வில்லைகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இரவு 09.00 மணி தொடக்கம் அதிகாலை 05.00 மணி வரை அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகும் விதத்தில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கூடுதல் தண்டனை வழங்கக்கூடிய யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்டொக்டர் மஹிபால மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தாலும், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார...
கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு நடைமுறை, சீனாவிலும் அமுலில் உள்ளதாகத் தெரியவந்துள்ளதை அடுத்து, அந்த முறைமையை இலங்கைக்கும் கொண்டுவருவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர்...
பிரபாகரன் குறித்த விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் பிரதமராகியிருப்பார் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இனவாதக் கருத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்வாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில் இணைந்து கடமையாற்ற தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிததுள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின் போது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் இணைந்து...
எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலட்சியம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர்களின் சங்கத்துக்கு, கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று, இதுவரை...
நாட்டில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு ஊவா , வடமத்திய மத்திய மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் மழை அல்லது மழை...
Loading posts...
All posts loaded
No more posts