- Wednesday
- January 15th, 2025
இன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மக்களால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதன்படி, யுத்த முடிவுக்கு பின்னர் வடக்கில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன, முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட தொழில் கடன்களும் நிறுத்தப்பட்டுவிட்டன, இவற்றை கருத்தில் கொண்டு பொது எதிரணியாக இப் பிரச்சினைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கைகளை வருங்காலத்தில்...
அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி...
சமகால அரசாங்கத்தின் அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டத்திலேயே 26 000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுகொடுக்கும் முதலீடுகளை மேற்கொள்ள முடிந்திருப்பதாக பிரதமர் ரணில்விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். காலி கொக்கல முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கையுறை உற்பத்தி தொழிற்சாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் இங்கு உரையாற்றுகையில் இந்த விடயத்தை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 இற்கு நடைபெறவுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து அண்மைய நாட்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு...
வொக்ஸ்வெகன் நிறுவனத்தின் முதலீடு இன்றி வொக்ஸ்வெகன் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு 2016ம் ஆண்டு ஆரம்ப பகுதியிலேயே தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2015ம் ஆண்டு காலப்பகுதியில் வொக்ஸ்வெகன் தொழிற்சாலையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சர்வதேச ரீதியாக அந்த தொழிற்சாலை வீழ்ச்சியடைந்து காணப்பட்ட காரணத்தால் இறுதியில் வெஸ்டர்ன் ஒட்டோமொபைள் நிறுவனத்துடன் இணைந்து இந்த...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. குறித்த திருத்தப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக 8...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அது தொடர்பாக எந்தவொரு குழு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ...
119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு எதிர்வரும் 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 9ம் திகதி அதிகாலை 04.00 மணிமுதல் 06.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததை அடுத்து மேன்முறையீட்டிற்கான நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம்...
யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு...
வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஒரு அங்கமாக பலாலி, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பலமிக்கதோர் இலங்கை’ எனும் எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வெளியிட்டுவைத்து உரையாற்றிய பிரதமர், குறித்த பொருளாதார திட்டத்தில் பலாலி விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தியில்...
அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்காக 1 மில்லியன் சீனர்கள் நுழைவு விசா பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அமைப்புத் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ண நிராகரித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க...
மூன்று தசாப்தகால யுத்தத்தின் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, முப்படையினரின் பங்களிப்புடன் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார். பௌத்த விகாரைகள் மட்டுமன்றி, தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் ஆரம்பிப்பதற்கு...
மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்னவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசிகள் விற்பனை செய்யப்படுவதாக, அண்மையில் ஊடகங்களில்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு...
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக விசேட போக்குவர்த்து நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படும்.
Loading posts...
All posts loaded
No more posts