- Wednesday
- January 15th, 2025
எதிர்காலத்தில் சமூர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார். எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பதிலீடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஹிங்குராங்கொட, சமூர்த்தி மாதிரி கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் கூறினார். குறித்த...
கடுமையான வரட்சியை நாடு எதிர்க்கொள்ளவுள்ள நிலையில், நீரையும், மின்சாரத்தையும் இயன்றளவு சிக்கனமாக உபயோகிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘எதிர்வரும் மூன்று மாத...
அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன்...
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று காலை வழங்கப்படவுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவான நியமனத்திற்கு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரச ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது...
மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது, அப்பகுதியில் அத்துமீறி விஹாரை அமைத்திருக்கும் பௌத்த தேரர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த இரு பிக்குகளும் இப்பிரதேசத்தில் இனிமேல் மாடு மேய்க்கக்கூடாதெனக் கூறி தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்....
தற்போது நாடளாவிய ரீதியில், காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிர் காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக்கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும்...
வழக்குத் தீர்ப்பானது முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளின் பின்னர் ரவிராஜின் குடும்பத்தினர் முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பிலான வழக்குத் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. குற்றம்...
நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை நோக்கும்போது, வடக்கை விட தெற்கிலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலணியின் தவிசாளருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”தெற்கிலே அபிவிருத்தி செயற்பாடுகள் போதுமான அளவில்...
அம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா விளக்கம் கோரியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகள் ஒதுக்கீட்டுக்கு மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான...
தென்னிந்திய பிரபல நடிகர் சூரியாவின் அகரம் அறக்கட்டளை நிலையம் தனது பணிகளை இலங்கையிலும் விஸ்தரிக்கவுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது சேவையைத் தொடர்ந்து வரும் குறித்த நிறுவனத்தின் வருடாந்த ஒன்றுகூடல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந்த ஒன்றுகூடலுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த அறக்கட்டளை அமைப்பின் பணிகளை இலங்கையிலும்...
2019ம் ஆண்டுக்குள் சகல அரச நிறுவனங்களையும் முழுமையாக சூரிய சக்தியால் வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தியின் மூலம் வலுவூட்டும் தேசிய திட்டத்தின் முதல் கட்டத்தை நிதியமைச்சர் நேற்று நிதியமைச்சில் தொடக்கி வைத்தபோது இவ்வாறு கூறினார். இரண்டு வருடங்களுக்குள் சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தி வேலைத்திட்டத்தில் இணைத்துக்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இதற்கு முன்னரும் விமலிடம் பலமுறை விசாரணை...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டு வருவது குறித்து தேர்தல்கள் ஆணையகம் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட...
திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி அமெரிக்க கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முக்கிய நகரங்களைக்...
அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை...
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர்...
கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (08) இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமய நிகழ்ச்சிகள் மற்றும் இன்று மாலை பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறவுள்ளன. இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணிவரையிலான 2 மணிநேரத்துக்கு, 119 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த வேண்டாமென பொலிஸ் தலைமை அலுவலகம் கடந்த 5ஆம் திகதியன்று அறிவித்திருந்தது. பொலிஸ் அவசர மத்திய நிலையத்தின் குறுகிய இலக்கமான 119 தொலைபேசி வலையமைப்பில் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் அவ்வலையமைப்பில்...
Loading posts...
All posts loaded
No more posts