- Saturday
- January 4th, 2025
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர். எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் “நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்போம்…” என்ற பதாகைகளை ஏந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போராட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலாமான அலரிமாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அலரிமாளிகைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பஸ் மற்றும் பொலிஸ் ட்ரக் வண்டிகளை அகற்றுவதற்காக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப்...
நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று நிலமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர். எதிர்காலத்தில் நாட்டில்...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். நிதியமைச்சராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக செயற்பட்டார். ஜோர்ஜியாவின்...
அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதன்படி, இரண்டாவது டோஸின் தடுப்பூசித் திட்டம் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் தொடங்கும் எனவும் மூன்று இலட்சம் டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இரண்டாவது டோஸுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இன்று...
மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தரொருவர் இளைஞரொருவரை தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரியவருகிறது. இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு சென்றுள்ளார். மஹரகம...
கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தண்டனை சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென...
தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச்...
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துளளார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 28 ஆம் திகதி போயா விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள...
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய தினம் சுமார் 15 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான...
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 05 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச...
வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அனுராதபுரம் வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று 2020.12.16 இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்...
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது....
கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டட வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு கோப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களம் இந்த தீ சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “இன்று (16-12-2020) மாலை 4.45...
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின்...
கண்டி- உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தன. இந்நிலையில் குறித்த குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குரங்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால்,...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றார். நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமையில் அமைச்சரவை கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts