- Wednesday
- January 15th, 2025
யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் இடம்பெற்ற இவ்வாறான போராட்டம் பெரும் களேபரத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் 07ஆம் திகதி இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் பாரிய ஆர்ப்பாட்டமான...
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் நாள் சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் சந்தித்து மாலபே சைட்டம் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பு நிலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியது. இச் சந்திப்பு பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உப செயலாளர்...
நாடு முழுவதும் இலவச WiFi வசதி வழங்குவதாகத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பலூன் திட்டத்தின் பின்புலத்தில் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல் உள்ளதா என ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. திட்டத்துடன் தொடர்புபட்டுள்ள ராமா என்ற நிறுவனம் குறித்து சிக்கல் காணப்படுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். முழு நாடும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புத் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று (09) அறிவித்தார். நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10:30 க்கு கூடியது. அதன் பின்னர் விடுத்த சபாநாயகர் அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்...
கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களால் நீர்கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஆக்கிரமித்துவைத்துள்ள தமது காணிகளை மீட்பதற்காக கடந்த பத்து நாட்களாக கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் சிங்கள மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தான் இலாபம் உழைக்க நினைத்திருந்தால் வைத்திய நிறுவனத்தை அல்ல கெசினோ நிறுவனத்தையே ஆரம்பித்திருப்பேன் என, சயிடம் நிறுவனத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், சயிடம் நிறுவனத்தை ஒருபோதும் மூடும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, சயிடம்...
இலங்கையில் ஆண்டு தோறும் சுமார் 2000 தொழு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1850 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திலே ( 43 சத வீதம் ) கூடுதலான தொழு நோயாளர்கள் காணப்படுகின்றனர். அடுத்த படியாக தென் மாகாணத்தில்...
மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த சிலரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சயிடம் நிறுவனத்தின் முன் நடந்த இந்த சம்பவத்தால், சமீர சேனாரத்னவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை ஒரு எளிமையான மனிதனாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வரும் ஜனாதிபதி மைத்திரி, தமது சொந்த ஊரான பொலனறுவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து தாம் வாழ்ந்த இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார். தமது கிராமத்து மக்களுடன் இன்முகத்துடன் சிரித்துப் பேசி நலம் விசாரித்த ஜனாதிபதி மைத்திரி, தாம் சிறுவயதில் வாழ்ந்த வீட்டிற்கும் சென்றுள்ளார். மற்றும் அங்குள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து, தாம் இத்தகவலைப் பெற்றுள்ளதாக சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதன்படி...
இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்படும் நபர் ஒருவருக்கு இந்த மருந்தை உடனடியாக வழங்குவதன் மூலம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த மருந்தை மாரடைப்பு ஏற்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டுமென, வைத்தியர்கள்...
பேஸ்புக்கில் பதிவுசெய்கின்ற விடயங்கள், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றமையால், அவ்வாறான விடயங்களைத் தவிர்க்குமாறு, பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புத் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில், சட்டமொன்றை கொண்டுவருவதைவிட, சிறுவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பதிவுகளைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது என, குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் - ஜனாதிபதி நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்...
மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்...
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும்...
குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுத்ததுபோல், குறைந்த விலையில் வைத்தியர்களை நியமித்து நோயாளிகளின் உயிரோடு விளையாட அமைச்சர் ராஜித முற்படுகிறார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சங்கத்தின் செயலாளர் நவீன்...
பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...
வடக்கை போன்று தெற்கிலும் அன்றாடம் வாளால் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் பதிவாகின்றன எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கில் நடைபெறும் விடயங்களை மாத்திரம் பொய்யாக ஊதி பெரிதாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து, அண்மையில் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த...
Loading posts...
All posts loaded
No more posts