- Monday
- January 13th, 2025
“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகளை, சரியானமுறையில்...
இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாத காலத்தில், நாடு முழுவதும், 500ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் எச்.1 என்1 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது பிணை கோரிய விண்ணப்பம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக...
இன்புளுவன்சா AH1N1 காய்ச்சலுக்கு சமாந்தமரமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார இதனைக் கூறினார். இந்த வகை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாக தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் காணப்படும்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நேற்று மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா பணம் பறிபோயுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது...
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர், பொரளை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அத்துடன், அங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியுறும் வண்ணம் செயற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் இவ்வாறு மனிதக் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தனக்கு பிணை வழங்க கோரி நேற்று (புதன்கிழமை) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவில் இருந்த போது, 40 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதனால் அரசாங்கத்திற்கு ரூபா...
தெஹிவளையில் தமிழ் மாணவர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் ஊடாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு...
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்குமாயின் எதிர்வரும் ஏப்றல் மாதம் முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் ஹரித...
அரச நில அளவைத் திணைக்களத்தை மூடிவிட்டு, அரசின் சகல நில அளவைப் பணிகளையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கையொப்பமிடுவதற்கு காணி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யு. எம். பி.பீ. உதுகொட அறிவித்துள்ளார். இவ்வாறு நில அளவைப் பணிகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதானது நாட்டின்...
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது அப்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று...
பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா...
மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுாராட்சி...
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும் என வௌிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். எரிஸ் – 13 எனும் கப்பல் கடற் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்...
இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்தம், இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் அவலநிலைமை நாட்டில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இவர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது....
ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். கல்வியமைச்சில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது. கல்வி அமைச்சர்...
பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது. கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தீப் பற்றிக் கொண்டிருந்த வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தத்தை கேட்ட நிமலசிறி, விரைந்து செயற்பட்டு, அந்த...
மட்டக்களப்பு – நாவற்குடா – மாதர் வீதியில் வசித்துவந்த 4 வயது சிறுவன் ஒருவர், தனது வளர்ப்புத் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்புத் தாய் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான குறித்த தாய் நூலகமொன்றில் பணியாற்றுபவர் என...
புதிதாக சுற்றோட்டத்துக்கு விடப்படவுள்ள 1 ரூபா நாணயக் குத்தியினதும் 5 ரூபா நாணயக் குத்தியினதும் உலோகங்களை துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளி நிறம்) மாற்றப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 1 ரூபா மற்றும் 5 ரூபா நாணயக் குத்திகளின் பித்தளை முலாமிட்ட (தங்க நிறம்) மாற்றப்படவுள்ளது. இதேவேளை 5 ரூபா நாணயக் குத்தியின் விளிம்பில்...
Loading posts...
All posts loaded
No more posts