சைட்டம் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு : ஜனாதிபதி

சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக்கல்லூரியான சைட்டம் (South Asian Institute of Technology and Medicine ) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக நிர்வாக சபையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தனிநபர் உரிமையிலிருந்து இதனை விடுவிப்பது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி...

இணையத்தின் மூலம் பாஸ்போட்களை பெற வாய்ப்பு

கடவுச் சீட்டுக்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராகி வருகிறது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நவீனப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை...
Ad Widget

அரசாங்க பதவிகளில் முக்கிய மாற்றம்! : ஜனாதிபதி அறிவிப்பு

அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இன்னும் இரண்டு வார காலத்தில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதன்போது பல புதிய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு...

நல்லாட்சியில் அத்தியவசியப் பொருட்களை விட போதை பொருட்களே மலிவாக கிடைக்கின்றது

இன்று போதைப்பொருட்களே நாட்டில் மலிவாக கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குருநாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எமது ஆட்சி காலத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு காலங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு சலுகைவிலையில் வழங்கினோம். ஆனால் இம்முறை அரசாங்கம்...

தமிழர்கள் இருவர் கடத்தல்: அநுரவிடம் விசாரிக்க மீண்டும் அனுமதி

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ள, கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் அனுமதியளித்தது. இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று( 18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....

மீதொட்டமுல்லை சம்பவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் புதிய சிகரெட் நிறுவனமா?

இலங்கைக்குள் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்ய தயாராகி வருவதாக வௌியான தகவல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. சிகரெட் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமது சங்கம் நிபந்தனைகளற்ற ஆதரவளித்துள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் நலிந்த சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார். இது இவ்வாறு இருக்க, இலங்கைக்குள்...

இலங்கையில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது!

நாட்டின் தென் கடற்பரப்பிற்கு அப்பால் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூமியதிர்ச்சி காலி வெலிகம பிரதேசத்திலிருந்து 1512 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அனுதாபம்

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அவரது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது.இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான...

மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்ததில் 10 பேர் பலி

மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. குப்பைமேடு சரிந்துவிழுந்ததில், 17 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரை மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 13 வயதான பாடசாலை மாணவியும், 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள்...

மாமியார் கொடுமை தாங்க முடியாமல் மூன்று பிள்ளைகளுடன் படகில் இந்தியா சென்ற பெண்!

இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மாமியாரின் கொடுமை காரணமாக இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்த நடவடிக்கை

பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்தப்படவுள்ளது. இது தொடாபாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தாதவது: இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில் நிர்மாணிக்கப்பட்டுகிறது என்றார். இதற்காக 50 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. இந்தப் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. பரீட்சை நடாத்துதல், விடைத்தாள் பரீட்சித்தல்,...

வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்

அளவுக்கு அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம். வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது. 0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால் முறைப்பாடுகளை வழங்க முடியும். வாகனங்களின் புகைப் பரிசோதனையை...

வறுமைக்கு கரம் கொடுக்கும் ‘உணவளிக்கும் கரங்கள்’

நாம் ஓர் அற்புதமான உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். எம்மைச் சூழ இரு வகையானவர்கள் வலம்வருகின்றனர். ஒரு சாரார் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். இன்னோர் சாரார், ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இறைவன் படைப்பில் எவ்வித நீதமும் இல்லையென்று தோன்றுகின்றதல்லவா? சவூதி மன்னர் சல்மான் 460 தொன்கள் கணமான 23000 சுகபோக பெட்டி, படுக்கைகளுடனும், 1500 பணியாட்கள்,...

சில பொருட்களை இறக்குமதி செய்யத் தடை! விற்பனை செய்தால் சிறை!!

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு...

இரு நாட்களாக மைதானத்தில் தங்கியிருந்த மாணவன், மாணவி கைது

வீடுகளிலிருந்து வெளியேறி, இரண்டு நாட்களாக விளையாட்டு மைதானமொன்றில் தங்கியிருந்த, சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியொருவரையும் மாணவரொருவரையும், கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயதுடைய இவ்விரு மாணவர்கள் இருவரும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இவ்விருவரும், நீர்க்கொழும்பு, கடொல்கெலே பொது மைதானத்தில் தங்கியிருந்த நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளனர்....

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்

திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இந் நிலையில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

மாலபே தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பிற்கு நுாற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடிய கான்ஸ்டபில் வசமாக சிக்கினார்

கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கச் சங்கிலி 85,000 ரூபா பெறுமதியானது எனத் தெரியவந்துள்ளது. இதனை கொள்ளையிட்டு தப்பி ஓடிய வேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் பூங்கா பாதுகாவலர்கள் உள்ளிட்ட குழுவினர், சந்தேகநபரை மடக்கிப்...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த 60வயது ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியளவில் அகுருஸ்ஸ - எல்லவெல பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர், ரியூசன் வகுப்பறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். இதனையடுத்து, கணித...
Loading posts...

All posts loaded

No more posts