நீரில் மூழ்கும் அபாயத்தில் பாராளுமன்றம்!

தொடரும் மழை காலநிலை காணரமாக தியவன்னா ஓயவின் நீர்மட்டம் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்ற நுழைவாயில் பகுதிகளில் மணல் மூட்டைகளை நிரப்பி கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை சற்று குறைவடைந்துள்ளதால் தியவன்னா ஓயவின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இன்றும், நாளையும் மழை...

அனர்த்த உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண காலநிலையினால், ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 104 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
Ad Widget

மோரா (MORA) சூறாவளி வலுவடைந்துள்ளது

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா (KOLKATA) நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும் வங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் (CHITTAGONG)...

அதியுயர் ஆபத்து வலயங்களாக 8 மாவட்டங்கள் பிரகடனம்!

நாட்டின் அனர்த்தநிலை காரணமாக 8 மாவட்டங்கள் அதியுயர் ஆபத்து வலயங்களாக தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் இரத்தினபுரி,கேகாலை,காலி,களுத்துறை,மாத்தறை, அம்பாந்தோட்டை,கண்டிமற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பது ஆபத்தானது என்றும், அடுத்துவரும் நாட்களுக்கு குறித்த பகுதி மக்கள் மிகவும்...

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்: இரகசிய உடன்படிக்கை கைச்சாத்து

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும்- அமெரிக்காவிற்கும் இடையே இரகசிய உடன்பாடொன்று கையெழுத்தாகியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதன்படி திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் குறித்த கடற்படை தளத்தை அமைப்பதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அமெரிக்காவிடமிருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான போர்...

நீடித்துவரும் சீரற்ற காலநிலை: உயிரிழப்பு எண்ணிக்கை நூறை எட்டியது

நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தினால் 5 இலட்சத்திற்கும்...

பரீட்சை ஒத்திவைப்பு

வௌ்ள ​​அனர்த்தம் காரணமாக, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த பரீட்சையை நடத்துவதற்கான மற்றுமொரு தினம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், விரைவில் பரீட்சை தினத்தை அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள் அனர்த்த நிலை தொடர்பில்,...

விசேட தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய 011-2136226, 011-2136136 அல்லது 077-3957900 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொண்டு முகம் கொடுத்துள்ள அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மத்திய மலை...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை கோரி கடிதம்

அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் வழக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரிக்கை...

சீரற்ற காலநிலை: 28 பேர் உயிரிழப்பு : 41 பேரை காணவில்லை

சீரற்ற காலநிலை இதுவரையில் 28 பேரின் உயிர்களை பறித்துள்ளது. கடும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. புளத்சிங்கள போகஹாவத்த...

ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் களத்தில்; வௌிநாடு செல்லவும் தடை

லங்கையின் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

விக்னேஸ்வரனை கைது செய்தால் ஞானசாரர் சரணடைவார் : பொது பலசேனா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஞானசார தேரரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த...

இலங்கை விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்திற்கு அமைய பயணி ஒருவர் தனது கைப்...

அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற விரைவில் நடவடிக்கை: நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

நாடளாவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால், அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக, அந்த அமைப்பு விடுத்திருந்த பகிரங்க அழைப்பில், நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து நாளையதினம் நாடளாவிய ரீதியில்...

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தல்!

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்த 120 இலங்கையர்கள் அங்கிருந்து இன்று (புதன்கிழமை) நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான மூலம் இரண்டு கட்டமாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும், முதற்கட்டமாக இன்று காலை 9.30 மணிக்கு 50 பெண்கள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்கா பொலிசார் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையில் உள்ள...

சிறுபான்மை மக்களை மிரட்டும் சிங்கள சுவரொட்டி!

பதுளை வாழ் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், சிங்கள மொழியிலான சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘சிங்களயாகே இவசீம பரீக்ஷா நொகரனு’ (சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே) என்று அச்சிடப்பட்டு, பதுளை முதியங்கனை ரஜமஹா விஹாரையின் பின்னால் செல்லும் பிரதான வீதியின் மதிலில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் அண்மைய நாட்களாக சிறுபான்மை சமூகங்களை...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இவ்வாறான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாளையதினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பூரண கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதன்போது அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள்...

முன்னறிவிப்பு இன்றி, பணிப்புறக்கணிப்பிற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயார்!

சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறினால் முன் அறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் முன்வைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஷா தெரிவித்துள்ளார். மேற்படி...

ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய வங்கி முன்வந்துள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி பொதுவான நிலைக்கு வந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts