- Thursday
- January 2nd, 2025
ரயில்வே ஊழியர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகள் தவறியதால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படவிருந்த ரயில்...
இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடிவிட்டு, எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்னர் நாட்டைத் திறக்குமாறு ஹரிமக என்ற தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் நெருக்கடியில், அத்தியாவசிய பொருட்களை பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் வரிசையில் நிற்பதன் மூலம் மக்களின் உழைப்பும், செல்வமும், நேரமும் அழிக்கப்படுவதாக...
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர்...
அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடை நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு...
பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி பண்டராகமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்று வீடு திரும்பிய பின்னரே...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரிய நடைமுறைகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு வெளியிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை...
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக கல்விசார தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு செல்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஜித்திலகரட்ண தெரிவித்துள்ளார். இலங்கையிடம் 6000 மெட்ரிக்தொன் எரிபொருளே உள்ளது அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலை காணப்படுகின்றது,என...
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைக்கு...
போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை...
வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும் வழங்க முடியாமல், மூன்று நாட்களாக அவரது பிள்ளைகள் கடும் பசியால் நீரை மட்டும் அருந்தியுள்ளனர். அதனை பார்க்க முடியாமல் தாய் உயிரை பறிக்கும் ஆபத்தான விதைகளை உட்கொண்டுள்ளார்....
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிது. எனினும் தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை.
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் அருகே வசித்த 9 வயதான பாத்திமா ஆய்ஷா அக்ரம் எனும் சிறுமியின் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 'பல்லி குட்டி' என்ற புனை பெயரால் அறியப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான 28 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் வௌியாகியுள்ளன. இன்று (30) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கிச் சூட்டுக்கு...
பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்களை அழித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சதுப்பு நிலத்தில், பல்வேறு...
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர். இந்த நிலையில்,...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இன்று (25) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
Loading posts...
All posts loaded
No more posts