இன்று முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்: போக்குவரத்துப் பொலிஸ்

சாரதிகள் உட்பட போக்குவரத்துத் தொடர்பான சட்டங்களை மீறுவேர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் சைக்கிள் சாரதிகளுமே காணப்படுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதை ஒழுங்கு...

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: சம்பிக்க ரணவக்க

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக...
Ad Widget

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று காற்றுடன் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களுக்கும் இன்று (09) மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் மழை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

திருமுருகன் காந்தியை விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது, பாரத தேசத்திற்கு விடுதலை...

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இதுவரை 3 ஆயிரம் ரூபாவாக இருந்த மாதாந்த கொடுப்பனவுத் தொகையை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு...

தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர்

தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு எவ்வித இடையூறுகளும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டாரின் தற்போதைய நிலைமை நாட்டின்...

முதலமைச்சர் விக்னேஷ்வரனை கைது செய்ய வலியுறுத்தல்!

இனவாதம் பேசுபவர்களை கைது செய்வதாயின் முதலில் விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரையே கைது செய்யுங்கள் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். பௌத்தர்களுக்கு நல்லிணக்கத்தை கற்றுதர வேண்டியதில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே நல்லிணக்கம் என்ன என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின்...

கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டாரிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள், கட்டார் நாட்டின் உள்ளேயே, தங்களது பணத்தினை டொலராக மாற்றிக் கொள்ளுமாறு, கட்டாரில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போழுது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் கட்டார் நாட்டில் உள்ளதாகவும், இப்போதைக்கு நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாகக் காணப்படுவதாகவும், விமான சேவைகளில் மாத்திரமே பிரச்சினைகள் இருப்பதாகவும்...

‘பிரசவத்துக்கு பின்னர் இரவு கடமை இல்லை’ : ராஜித சேனாரத்ன

பிரசவத்துக்குப் பின்னர், ஒருவருட காலத்துக்கு, தாதியர்களுக்கு இரவு கடமையை இல்லாமல் செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும், தாதியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை, புதிய தாதியர் வித்தியாலயத்துக்கான எட்டுமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை, நேற்று (05) நாட்டி வைத்த...

பிளாஸ்ரிக் அரிசி, பிளாஸ்ரிக் முட்டை : வதந்திகளில் உண்மை இல்லை

இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் அரிசி மற்றும் முட்டை சந்தையில் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இணையத் தளத்தில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் கேட்ட போது இந்த பிரிவின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் இது குறித்து...

சமூக வலைத்தலங்கள் ஊடாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சமூக வலைத்தலங்கள் ஊடாக இனங்கள் மற்றும் ஆகமங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பும் நபர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்பொருட்டு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் நாரம்மல பகுதி ஹோட்டல் ஒன்றில்...

அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர். வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது. இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை...

பாதிக்கப்பட்ட மக்களுடன் சம்­பந்தன்

தென்­னி­லங்­கையில் அனர்த்தம் இடம்­பெற்ற பகுதிகளுக்கு இன்­றைய தினம் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேரடியாக சென்று பார்­வை­யிட்டுள்ளார். அதே வேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யமுடியாவிட்டால் கூட்டமைப்பினருக்கு தோல்வி!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்காவிட்டால், அது அரசியல் தோல்வியாகவே அமையும் என்பதே அரசியல் கைதிகளின் கருத்து என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கூறியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகஸின்...

திருகோணமலை நகரில் இஸ்லாமிய வணக்கஸ்தலம் மீது தாக்குதல்

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்களாம் என சந்தேகிக்கப்டுகின்றது. குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளது இத்தீ வைப்பினால்...

இயற்கை பேரனர்த்தம்: உயிரிழப்பு எண்ணிக்கை 300ஐ தாண்டும் என அச்சம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐயும் தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்ற அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...

தெற்கில் வெள்ளம் :வடக்கில் வறட்சி

தெற்கில் வெள்ளத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் வடமாகாணத்தில் வறட்சியினால் மக்கள் அதிளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சியின் காரணமாக வடமாகாணத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 4இலட்சத்து 40ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த மாவட்டங்களை சேர்ந்த இடர்முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி...

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 202 பேர் உயிரிழப்பு

வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். காயமடைந்தோர் 63 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. 6 லட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...

அசாதாரண காலநிலை : உயிரிழப்புகள் 180 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 110 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் 153 ஆயிரத்து 382 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

‘மோறா’ சூறாவளியால் இலங்கை பாதிப்பு இல்லை: வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த ‘மோறா’ சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) பங்களாதேஷ் பகுதிக்குள் நிழையும் எனவும் இதன்காரணமான இலங்கைக்கு பதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, மேகம் மூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு...
Loading posts...

All posts loaded

No more posts