- Sunday
- January 12th, 2025
புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...
இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான...
நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசிக்கொண்டிருக்காமல் எமக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என இராஜாங்க அமைச்சரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் எதிரணியினரை கடுந்தொனியில் எச்சரித்துள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் நாடாளுமன்றில்...
”நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் இணைந்து சட்டமியற்றக்கூடியதாக இருக்குமென்றால் இந்த நாடாளுமன்றம் எதற்கு?” என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்றும், பலவந்தமாக காணாமல்போகச் செய்வதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் அவசியமில்லை என்றும், அண்மையில் மகாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே அவர் இவ்வாறு...
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகியவற்றிற்கு வாய்ப்பே இல்லை என தேசிய கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பையும் காணாமல் போனோர் அலுவலகத்தையும் உடனடியாக கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறும் மாற்று வழிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார்...
“இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன. இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும்...
இலங்கை இராணுவம், எந்தவொரு விசாரணைக்கும் தயாராக உள்ளது. அது, போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை” என, புதிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இன்று (5) தெரிவித்தார். இலங்கையின் 22ஆவது இராணுவத் தளபதியாக, இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்ற போதே, அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை இராணுவத்துக்கு தண்டனைச் சட்டம், இராணுவச் சட்டம்...
வடக்கில் முழுமையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பதில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை ஆரம்பிக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருவார காலம் ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதியென அதிரடியாக புதிய நியமனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபில வைத்தியாரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, லெப்டினென் ஜெனரல் மகேஷ் செனாநாயக்க புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன் ஜெனரல் மகேஷ் செனநாயக்க 22 ஆவது இராணுவத்...
டெங்கு நோய் காரணமாக பதுளை பெரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இசுரங்க விஜேவர்தன மற்றும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசுரங்க விஜேவர்தன என்ற மாணவன் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று...
அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததற்கு முரணான வகையில் எமது பிரச்சினை களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்கினையே முன்னெடுக்கின்றது. எனவே, இந்நிலை நீடித்தால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா மேலும் குறிப்பிடுகையில் , எமது பிரச்சினைக்கு தீர்வு...
மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார் . கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடிகள் வெளிப்படைத் தன்மையற்ற கேள்விப் பத்திர முறைமையும் அமுலானதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். அரசாங்கம்...
அரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர். அரச வைத்தியசாலைகளில் மீளவும் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையினர் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத்...
இலங்கையில் சுற்றுலா பயணத்தில் ஈடுபடும் அமெரிக்க பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரிலுள்ள முச்சக்கர வண்டிகளில் ஏறுவதனை தவிர்க்குமாறு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி சாரதிகள், பெண் சுற்றுலா பயணிகளிடம் அங்க சேட்டையில் ஈடுபடும் பல சம்பவங்கள்...
கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென தெரிவித்ததாக, கேப்பாப்பிலவு மக்கள் குறிப்பிடுகின்றனர். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கேப்பாப்பிலவு மக்கள், அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர். ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்கவிடமே...
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் இன்றும் (28) பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் துணை இணைப்பாளர் எச்.கே.காரிய வசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பிரதான 3400 க்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த பணிநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நுவரஎலிய, கண்டி, காலி மற்றும் கொழும்பு...
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைட்டம் தனியார் நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு மருத்துவ சபையில் அனுமதி வழங்கப்பட்டமை மற்றும் அவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட பல...
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி இம் மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts