- Wednesday
- February 26th, 2025

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை விடுத்துள்ளார். அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குழுக்களை...

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பீதியை கிளப்பிய ‘கிறீஸ் மனிதன்’ தற்போது தென்னிலங்கையில் உலாவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ‘கிறீஸ் பேய்’ என அழைக்கப்பட்ட இவ்வகையான மனிதர்கள், உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக்கொண்டு, குறிப்பாக பெண்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். நாட்டை மிரட்டும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவையாக இவ்வாறான செயல்கள் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறான பல குற்றச்செயல்கள் கடந்த காலங்களில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். பாணந்துறை நகர சபை...

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை ஏற்படலாம் என துறைமுக மற்றும் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வேறு மாற்றுவழி இல்லாததால் நல்லாட்சி அரசில்...

மாலபே நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசுடமையாக்கும் நிகழ்வு நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவ கலாநிதி நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச ஆகியோர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதற்கமைய ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இம்மருத்துவமனை அரச மருத்துவமனையாக...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில்...

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இக்காலப் பிரிவில் மாத்திரம் 91000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தத்தமது வீடு, சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக மாத்திரமே இந்த டெங்கு...

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான நெவில் பெர்னர்ணடோ தனியார் வைத்தியசாலை, அதன் உபகரணங்கள்,...

தெற்கில் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாமொன்று புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முகாம்களின் மூலம் சுமார் 780 பேர்வரை நன்மையடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தென்பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கிய உலகத் தமிழர் பேரவைக்கு அரசாங்கம் நன்றி பாராட்டியுள்ளதாக ஊடகமொன்று செய்தி...

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் சித்திரவதைகள், குடிவரவு மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள்...

நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று இடம்பெறும். டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டத்திற்கு மக்கள் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்கு நோய் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்கம் அறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இலவச சுகாதார சேவையை மக்களுக்கு...

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அனைவருக்கும் இலவச இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வை-பை (wi-fi) வழங்கும் செயற்றிட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டாலும், அளித்த வாக்குறுதிக்கு அமைய விரைவில் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த முகாமின்...

தென்னிலங்கை கட்சிகள் இன்று வடக்கு – கிழக்கில் காலூன்றி தமது கட்சியின் வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், தமிழ் தலைமைகள் வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....

டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க...

மக்கள் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தெஹியத்த கண்டிய மகாவலி சாலிகா மண்டபத்தில் இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சியில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என்பதை...

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சகல அரச சேவைகளினதும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாநாடொன்றை நடத்தவுள்ளது. இதன் பலனாக நாட்டின் அரச சேவைகள் அனைத்தும் ஒரு நாள் ஸ்தம்பிக்கும் வகையிலான வேலை நிறுத்தப்போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் நலிந்த ஹேரத் தெரிவித்தார். இந்த போராட்டத்தின் ஒரு...

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தயாரித்தல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று நாட்டுக்கு அவசியம் இல்லை என்ற கருத்து தொடர்பில் தாம் அவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூட்டமைப்பின்...

நாட்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுராதபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மூளை செயலிழந்த 24 வயதுடைய இளைஞனின் இருதயம் இவருக்குப்...

All posts loaded
No more posts