- Saturday
- January 11th, 2025
எம்மிடம் உள்ள மக்கள் பலத்தினை நிரூபிக்க நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில்...
கொழும்பில் காலிமுகத் திடலிலும், கோட்டை உலக வர்த்தக மையம் பகுதியிலும் மணலுடன் கூடிய மழை பெய்ததாகத் தெரியவருகிறது. மழை நீருடன் மணலும் கலந்திருந்ததால், மழையில் நனைந்தவர்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மணல் படிந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லையென...
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (புதன்கிழமை) சந்தித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களையும் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார். நானும் எனது மனைவி ஜயந்தியும், அமெரிக்க ஜனாதிபதியையும் அவரது...
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு நேற்று இரவு 6.30 மணிக்கு நடைபெற...
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சகலரும் வழமை போன்று சேவைக்கு சமூகம் தருமாறு அவ்வமைப்பு...
மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நாளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நடாத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) ஆதரவு வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 08 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக GMOA அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்...
தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக...
ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக “ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்க முன்னணி” தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ரயில்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20ஆவது சட்டத் திருத்த சட்டமூலதத்திற்கு பெரும்பாலான மாகாண சபைகள் தங்களுடைய எதிா்ப்பை தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினா் இணைந்து அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக...
மின்சார சேவை தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று மாலை மின்சார சேவை தொழிற்சங்கத்துடன் தொழில்துறை அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிராத்ன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அதிகாரிகள் வழங்கவில்லை என்று இலங்கை மின்சார சபையின் கூட்டுத் தொழிற்சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன்...
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட படையினர்...
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கடமைக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன் இன்று காலை 8.30 இற்கு கடமைகளுக்குச் சமூகமளிக்காதவர்கள் வேலையிலிருந்து விலகியவர்களாகக் கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் மின்சக்தி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மின்சாரத் தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தமது பணிப்புறக்கணிப்பை...
நாட்டில் வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோர பிரதேசங்களில் நாளை முதல் பலத்த காற்றுவீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை)...
ஜனாதிபதி கையொப்பமிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (12) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவது அவசியமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதி...
2020ஆம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியானது முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புகையிலை உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதத்தினால்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கு அரசாங்கம் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாகவும், அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய அதன் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை மீது...
செப்டெம்பர் 20 முதல் 26 வரையான ஒருவார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....
இலங்கையின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இடைக்கால அறிக்கை இம்மாதம் 21ம் திகதி வெளியாகும் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் 20வது திருத்தச்சட்ட த்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் எனவும் கூறியிருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
Loading posts...
All posts loaded
No more posts