- Saturday
- January 11th, 2025
ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அடையாள அட்டைகளை...
இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ்...
இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. இதனை ஏனைய இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஏனைய மதங்களுக்கும் அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மடவல பிட்டியேகெதர ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற மதவழிபாடுகளின் பின்னர் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
அடுத்து வரும் சில தினங்களில் பருவப்பெயர்ச்சி காலநிலையில் படிப்படியாக அதிகரிப்பு நிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில், பிற்பகல் 2.00 மணியின் பின்னர், இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும், காலை வேளையில், மழை பெய்யும். ஊவா...
முச்சக்கரவண்டிகளில் கட்டணத்துக்கான வாசிப்புமானி பொருத்தப்படுவது அவசியம் ஆகும். 35வயதிற்கு குறைந்த நபர்கள் வாடகைக்கு முச்சக்கரவண்டிகளை செலுத்தாத வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் சிவில் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அமைச்சர்...
தற்போது சிறையில் உள்ள புலிகள் மிகவும் மோசமான குற்றவாளிகள், அவர்களுக்கு சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து உரையாற்றிய அவர், “ ஆயுதம் ஏந்தி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்த விடுதலைப் புலிகளை...
வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு சென்றிருந்த போதும், பிரதமர் அதனை செவிமடுக்காது வேறு விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தியதாக வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தல், வடக்கு கிழக்கு பகுதிகளில் இளைஞர்கள் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சினை,...
புங்குடுதீவில் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாருக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதேபோன்ற கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கான மிகஉயர்வான முறையில் பங்களிப்பு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம்...
தெற்குப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் வெளிச்சம் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்றிரவு 8.45 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்ட, களுத்தறை, கொழும்பு பிரதேசத்துக்கும் இந்த சப்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கொழும்புப் பல்கலைக்கழக வானியல்துறையின் பேராசிரியர்...
நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கிராமங்களில் நுண்கடன்நிதி...
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்...
பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைச் செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்ட போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விகளுக்கு...
ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று மாலை ரயில்வே சாரதிகள், அரசாங்க அதிகாரிகளுடன்...
நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை...
இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளமையை அடுத்தே மேற்படி நடவடிக்கைகைள் கைவிடப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய அதிகாரிகளின் நியமனம் தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை நீக்குமாறு கூறியே மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை அதுமல்பிடிய வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த துப்பாக்கியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த...
எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இறுதித் தருணத்தில் அவருடன் இருந்த ஏனைய...
பேருந்துக் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்துச் சபை அனுமதி தராவிடில் நாடு தழுவிய ரீதியில் பேருந்து உரிமையாளர்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவர்...
நாட்டின் பல பகுதிகளிலும், எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் இடையே இடையே மழை பெய்யுமெனவும் மேற்கு, வடமேற்கு மத்திய மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. ஏனைய மாகாணங்களில், மாலை 2 மணிக்குப்...
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி செய்சா தெரிவித்தார். மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர்...
Loading posts...
All posts loaded
No more posts