- Tuesday
- February 25th, 2025

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒன்றிணைந்த...

ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய...

பரசன்கஸ்வெவ - மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு...

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும் என்றும் சட்ட மா அதிபரின்...

பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய "நவெஸ்கா லேடி" கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என ஊர்ஜினப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள...

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பிரச்சினையால் வடக்கில் கடந்த மாதம் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டது. இப்பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கும்...

நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் வாசிக்கப்படகின்றது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள்...

கல்வி அமைச்சில் அதிகார பகிர்வு எதுவுமே இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரிகளும் அசமந்த...

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை விதித்து...
வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த சுற்றறிக்கையை தற்போது...

கர்பிணி தாய்மார்கள் எதிர்வரும் காலங்களில் வரிசையில் நிற்காமல், தொலைபேசி ஊடாக போசாக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் கர்பிணி தாய்மார்களுக்கு...

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் நிகழுமாக இருந்தால் பேரனர்த்தம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (புதன்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தற்போது இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும்...

புதிய அரசமைப்பு தொடர்பில் தமது கருத்தை தெரிவிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி மறுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துதள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான...

பட்டதாரிகள் அரச நியமனங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது நியாயமற்றது. அனைவருக்கும் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கிறேன் என்று விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். நேற்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஊடகவியாளரொருவரால்...

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று (01) கைச்சாத்திட்டார். இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியொன்றில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த...

தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்றலில் இக் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம்...

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை (Police Clearance Reports) பெற்றுக்கொள்வதற்காக அறிவிடப்படும் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து அதனை இலங்கை முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய...

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள்ளை எடுப்பதற்கு மதுவரி திணைக்களத்தின் அல்லது உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவது...

தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்படவுள்ளதால், வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வேறு மாவட்டங்களில் இருந்து வடக்கிற்கு படையெடுக்கும் மீனவர்கள், தமது கரைவலைத் தொழிலுக்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 400இற்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு...

All posts loaded
No more posts